2021 ஆம் ஆண்டுக்கான, கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 23 ஆம் திகதி முதல், ஜுன் மாதம் முதலாம் திகதிவரை இடம்பெறவுள்ளது.
குறித்த பரீட்சை பிற்போடப்பட்டுள்ளதாக இணையத்தளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பரப்பப்படும் தகவல்களில் உண்மை இல்லை என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை திட்டமிட்டபடி, எதிர்வரும் 23 ஆம் திகதி முதல், ஜுன் மாதம் முதலாம் திகதிவரை இடம்பெறவுள்ளது.