சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 19 பேர் கைது!

Date:

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 19 பேர் கிழக்கு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புலனாய்வுத்துறையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக நடத்தப்பட்ட ரோந்து நடவடிக்கையில் நேற்றிரவு (18) 7.30 மணியளவில் கிழக்கு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.

செய்யப்பட்ட சந்தேக நபர்களை திருகோணமலை துறைமுகப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த 19 பேரும் யாழ்ப்பாணம் மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதில் சிறுவன் ஒருவனும் பெண்ணொருவரும் அடங்குவதாகவும் நாளை 20ஆம் திகதி திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை திருகோணமலை துறைமுக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

ஈரானியக் கப்பல் விவகாரம்: மனிதாபிமான அடிப்படையில் இலங்கை தன்னிச்சையான முடிவை எடுத்துள்ளது: ஜனாதிபதி

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் நிலைகொண்டுள்ள 'IRIS Bushehr' என்ற ஈரானியக் கப்பலில்...

கொழும்பு துறைமுகத்தை பாதுகாப்பாக வந்தடைந்த ‘ஐரிஸ் புஷேர்’ கப்பலில் இருந்த 204 பணியாளர்கள்!

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் நிலைகொண்டுள்ள ஈரானுக்குச் சொந்தமான ‘IRIS Bushehr’ கப்பலில் உள்ள...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை

இன்றையதினம் (06) நாட்டின் தென் மாகாணத்திலும், இரத்தினபுரி, களுத்துறை மாவட்டங்களிலும் சில...

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...