சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதற்கு இலங்கை மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு சீனா முழுமையாக ஆதரவளிக்கும் என இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்துள்ளார்.
தூதுவர் மற்றும் நிதியமைச்சர் அலி சப்ரிக்கு இடையில் இன்று (02) இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.
சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய பங்குதாரர் என்ற வகையில், இலங்கையின் கோரிக்கையை சாதகமாக பரிசீலிக்க சர்வதேச நாணய நிதியத்தை ஊக்குவிப்பதில் சீனா செயலில் பங்கு வகிக்க தயாராக இருப்பதாகவும் கீ சென்ஹொங் வெளிப்படுத்தினார்.