சுகாதார துறைக்கு நிதியுதவி வழங்க ஶ்ரீலங்கா கிரிக்கெட் சபை தீர்மானம்!

Date:

நாட்டின் சுகாதாரத் துறைக்கு 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நன்கொடையாக வழங்கப்படவுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

ஶ்ரீலங்கா கிரிக்கெட்டின் நிறைவேற்றுக் குழு நேற்று கூடிய போது குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நன்கொடையாக வழங்கப்படவுள்ளதுடன், தேசிய புற்றுநோய் வைத்தியசாலைக்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நன்கொடையாக வழங்கப்படவுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் சபை குறிப்பிட்டுள்ளது.

மேலும், குறித்த நிதியுதவியின் அவசரத் தன்மை கருதி நன்கொடைக்கான நிதியை உடனடியாக விடுவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...