நாளையும், எதிர்வரும் 29ஆம் திகதியும் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது!

Date:

நாட்டில் நாளைய தினமும்(22), எதிர்வரும் 29ஆம் திகதியும் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
மேலும், நாளை முதல் எதிர்வரும் 1ஆம் திகதி வரை மாலை 6.30 மணிக்கு பின்னர் மின்துண்டிப்பு இடம்பெறாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தினங்களில் பரீட்சை இடம்பெறாத வேளையில் பிற்பகல் 12 மணி முதல் மாலை 6.30 மணி வரையிலான காலப்பகுதிக்குள் கைத்தொழில் வலயம் மற்றும் கொழும்பு வர்த்தக நகர வலயம் தவிர்ந்த ஏனைய அனைத்து வலயங்களுக்கும் 1 மணித்தியாலம் 45 நிமிடங்கள் முதல் 2 மணித்தியாலம் 15 நிமிடங்கள் வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
கைத்தொழில் வலயங்களுக்கு காலை 5 மணி முதல் 8 மணி வரையிலும், கொழும்பு வர்த்தக நகர வலயத்திற்கு காலை 6 மணி முதல் 9 மணி வரையிலும் 3 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...

Rebuilding Sri Lanka வேலைத்திட்டம் நாளை அங்குரார்ப்பணம்.

நாட்டை மீள கட்டியெழுப்பும் Rebuilding Sri Lank வேலைத்திட்டத்தை செயற்திறனுடன் முன்னெடுக்கும்...

வெனிசுவேலாவின் பதில் ஜனாதிபதி நான்தான்: டிரம்ப் அதிரடி.

வெனிசுவேலா நாட்டின் பதில் ஜனாதிபதி தான்தான் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமெரிக்க...