ஊரடங்குச் சட்டம் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த புகையிரத சேவை நாளை (12) காலை 8.00 மணிக்குப் பின்னர் மீள ஆரம்பிக்கப்படும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேநேரம், நீண்ட தூர ரயில் சேவை வெள்ளிக்கிழமை (13) ஆரம்பிக்கப்படும் என ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
வழமையாக காலை வேளையில் இயங்கும் சில புகையிரதங்கள் மாத்திரம் காலை வேளையில் இயங்காது எனவும் ஜயசுந்தர தெரிவித்தார்.
இதேவேளை இரவு 7.00 மணிக்குப் பின்னர் 1971 என்ற ரயில்வே வாடிக்கையாளர் சேவை அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் விபரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.