‘நாளை முதல் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும்’

Date:

இலங்கை பெற்றோலிய தனியார் பௌசர் உரிமையாளர்கள் சங்கம் சனிக்கிழமை (30) ஆரம்பித்துள்ள வேலை நிறுத்தம் காரணமாக நாட்டில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என எச்சரித்துள்ளது.

தனியார் எரிபொருள் பவுசர் உரிமையாளர்கள் கோரும் 60வீத கட்டண திருத்தம் தமக்கு கிடைக்கவில்லை என வேலை நிறுத்தத்தை முன்னெடுத்துள்ளனர்.

எரிபொருள் போக்குவரத்து நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டதன் தாக்கம் நாளை முதல் உணரப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

அதிகரித்துள்ள எரிபொருள் விலையுடன் ஒப்பிடும் போது போக்குவரத்துச் செலவுகளை மீளாய்வு செய்யத் தவறியமைக்கு எதிராக நள்ளிரவு முதல் தொழிற்சங்கம் நடவடிக்கைகளில் இருந்து விலகிக் கொண்டது.

எவ்வாறாயினும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் வாகனங்களின் எரிபொருள் விநியோகத்திற்கான அனுமதி பத்திரம் இரத்துச் செய்யப்படும் என்று நேற்றையதினம் எரிசக்தி அமைச்சர் எச்சரிகை விடுத்திருந்தார்.

எனினும் தமது கோரிக்கைக்கு தீர்வு கிடைக்காது எவ்வாறான அச்சுறுத்தல்களை விடுத்தாலும் பணிக்கு திரும்ப மாட்டோம் என்று அந்த வாகனங்களின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை பெட்ரோலியக்கூட்டுதாபனத்திற்கு எரிபொருளை ஏற்றிச்செல்லும் வாகனங்களில் 80 வீதமானவை தனியாருக்கு சொந்தமானவையே.

இதனால் இவர் பணிகளில் இருந்து விலகினால் எரிபொருள் விநியோகத்தில் மேலும் நெருக்கடி ஏற்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

Rebuilding Sri Lanka வேலைத்திட்டம் நாளை அங்குரார்ப்பணம்.

நாட்டை மீள கட்டியெழுப்பும் Rebuilding Sri Lank வேலைத்திட்டத்தை செயற்திறனுடன் முன்னெடுக்கும்...

வெனிசுவேலாவின் பதில் ஜனாதிபதி நான்தான்: டிரம்ப் அதிரடி.

வெனிசுவேலா நாட்டின் பதில் ஜனாதிபதி தான்தான் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமெரிக்க...

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல்.

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூர்யவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச...