பஸ் கட்டண அதிகரிப்பால் ரயிலில் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை 50 வீதத்தால் அதிகரிப்பு!

Date:

பஸ் கட்டண அதிகரிப்பு மற்றும் எரிபொருள் நெருக்கடி காரணமாக புகையிரத பயணிகளின் எண்ணிக்கை 50 வீதத்தால் அதிகரித்துள்ளதாக பிரதி பொது முகாமையாளர் (போக்குவரத்து) காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையில்,

பயணிகள் நெரிசலைக் குறைக்கும் வகையில் இன்று (30) பல ரயில்களில் இரண்டு கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என்று தெரிவித்த காமினி செனவிரத்ன, மேலும் பல ரயில்களுக்கு நாளையதினம் இரண்டு கூடுதல் பெட்டிகள் சேர்க்கப்படும் என்றும் கூறினார்.

மேலும், பயணிகளின் எண்ணிக்கை எதிர்பாராத அதிகரிப்பு மற்றும் தொலைதூரப் பகுதிகளிலுள்ள புகையிரத நிலையங்களில் பயணச்சீட்டுகள் தீர்ந்து போவதனால் புகையிரத நிலைய அதிபர் பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதேநேரம், இன்று காலை பெலியத்த புகையிரத நிலையத்தில் இருந்து புறப்பட்ட ‘ரஜரட்ட ரஜின’ புகையிரதம் பெலியத்த புகையிரத நிலையத்தில் நிரம்பியிருந்ததால் மாத்தறை புகையிரத நிலையத்தில் பல பயணிகள் ரயிலில் ஏற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் அவ்வவ்போது மழை!

இன்றையதினம் (30) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

காசாவிற்கு உதவிகளை ஏற்றிச் செல்லும் குளோபல் சுமுத் புளோட்டிலாவை கண்காணிக்கும் துருக்கி ட்ரோன்கள்

இஸ்ரேலின் எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், காசாவிற்கு உதவிகளை ஏற்றிச் செல்லும் குளோபல் சுமுத்...

காசா போர் முடிவுக்கு வருமா? இன்று டிரம்ப் – நெதன்யாகு சந்திப்பு!

இஸ்ரேல் - பலஸ்தீனம் இடையேயான போரை நிறுத்துவது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி...

இலஞ்சம் வாங்கிய முன்னாள் சீன அமைச்சருக்கு மரணதண்டனை

சீனாவில் ஜி ஜின்பிங் தலைமையிலான அரசு கடந்த சில காலமாகவே லஞ்சம்...