பாராளுமன்றம் அருகே போராட்டம் நடத்திய 13 பேரும் பிணையில் விடுதலை!

Date:

பாராளுமன்றத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த 13 பேருக்கும் கடுவெல நீதவான் நீதிமன்றினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற நுழைவாயில் வீதியில் அத்துமீறி நடந்து கொண்டமைக்காக குறித்த குழுவினர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாராளுமன்ற சபாநாயகரிடம் கடிதம் ஒன்றை கையளித்த பின்னர், பாராளுமன்ற வளாகத்தை விட்டு வெளியேறியவுடன் குழு தமது எதிர்ப்பை ஆரம்பித்தது.

பொல்துவ சந்தியில் உள்ள நாடாளுமன்ற நுழைவாயில் பகுதியில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டவர்கள் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் குழுவை கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிறுத்திய பின்னர் பிணையில் விடுவித்துள்ளார்.

இந்த நிலையில் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள மகரகம பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக, கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...