பொதுசொத்துக்களுக்கு சேதம் விலைவிக்கும் நபர்களுக்கு எதிராக அரசு துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவு!

Date:

இலங்கையில் நிலவும் அமைதியின்மையை அடக்கும் வகையில் பொதுசொத்துக்களுக்கு சேதம் விலைவிக்கும் நபர்களுக்கு எதிராக அரசு துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுப்படுபவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த பாதுகாப்புப் படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வரலாற்றில் இலங்கையில் ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதார நெருக்கடி காரணமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டுமென அமைதியான முறையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த திங்களன்று அமைதியான முறையில் போராட்டத்தை மேற்கொண்டுவந்தவர்கள் மீது சிலர் மேற்கொண்ட தாக்குதல் காரணமாக நாடளாவியரீதியில் பெரும் போராட்டங்களும் வன்முறைகளும் வெடிக்க தொடங்கியதை அடுத்து பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ஸ இராஜினாமா செய்ய நேரிட்டது.

பொதுச் சொத்துக்களைக் சேதம் விலைவிப்பவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள இராணுவத்திற்கு அரசாங்கம் உத்தரவிட்டது.

பல்லாயிரக்கணக்கான இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை வீரர்கள் கொழும்பு வீதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் இருந்த போதிலும் கொழும்பு நகரில் மேல் மாகாணத்துக்கான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியான தேசபந்து தென்னக்கோன் மீது குண்டர்களால் தாக்கப்பட்டார். அவர் அமைதியான போராட்டக்காரர்களைப் பாதுகாக்க போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.

கடந்த திங்கட்கிழமை முதல் நாட்டில் இடம்பெரும் இவ்வாறான அசம்பாவிதமான சம்பவங்கள் காரணமாக எட்டு பேர் உயிரிழந்துள்ளதாகவும், 249க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்குமாறு மகிந்த தனது ஆதரவாளர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் கவனக்குறைவாக அறிவுறுத்தியதாக இலங்கையின் மூத்த ஊடகவியலாளரும் பிரபல சமூக அரசியல் ஆய்வாளருமான தர்ஷன ஹந்துங்கொட சுட்டிக்காட்டியுள்ளார்.

ராஜபக்ச குடும்பத்தை நாட்டை விட்டு வெளியேற்றுவதே நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரே வழி என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் அசு மாரசிங்க நாட்டின் நிராயுதபாணியான மக்களை வீதியில் இறங்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

தர்ஷன ஹந்துங்கொட – சிரேஷ்ட ஊடகவியலாளரும் பிரபல சமூக அரசியல் ஆய்வாளர்.

“போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாதகாலம் நடந்து கடந்துவிட்டது. குறிப்பாக அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்ட வேளையில் முன்னாள் பிரதமர் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷஇ அந்த வளாகத்தில் பாரிய கூட்டமொன்றை நடத்தினார். மகிந்த, ஜொனி, சிபி எல்லோரும் இருந்தார்கள்.
நிராயுதபாணியான அப்பாவிப் பொதுமக்களின் போராட்டத்திற்குச் சென்று தாக்குவதற்கு அவர்கள் கட்சிஆதரவாளர்களுக்கு உத்வேகத்தை அளித்தனர் அதுதான் உண்மை கதை. இது அரசியல் உலகில் இரகசியமில்லை. மஹிந்த ராஜபக்ஸ மறைமுகமாக இவர்களை தூண்டினார். அதனால்தான் நிராயுதபாணியான அப்பாவி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் போராட்டத்தின் மீது வன்முறை கட்டவிழ்த்தப்பட்டது. இதனால் இவர்கள் மிகவும் கொடூரமான முறையில் தாக்கப்பட்டனர்.”

அது மட்டுமன்றி இன்று இந்த காணொளியை பதிவிடும் போது இதுவரையில் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன் கிட்டத்தட்ட 215 பேர் வரையில் படுகாயமடைந்துள்ளனர். இந்த 8 கொலைகளுக்கும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷஇ அதாவது தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் நேரடியாகப் பொறுப்பு கூறவேண்டும்.

அப்பாவி பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் மற்றும் இடம்பெற்ற கொலைகள் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷவை கைது செய்யுமாறு சட்டத்தரணிகள் சங்கத்திற்கு முன்மொழிகின்றோம். எனவே குறித்த வன்முறை சம்பவம் தொடர்பில் விசாரிக்க வேண்டும், சாட்சிகளை அழைக்க வேண்டும், தற்போது அவர்கள் திருகோணமலை உள்ள ஒரு தீவில் உள்ளனர். நாட்டை விட்டு வௌியே செல்ல முயற்சிக்கின்றனர் அவர்களை நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கக்கூடாது, அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிகளை சிறையில் அடைக்க வேண்டும். என சிரேஷ்ட ஊடகவியலாளரும் இலங்கையின் பிரபல சமூக அரசியல் ஆய்வாளருமான தர்ஷன ஹந்துங்கொட தெரிவித்துள்ளார்.”

ஹரிந்த பொன்சேகா – சமூகசெயற்பாட்டளர்.

“கடந்த ஒருமாதகாலமாக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டகாரர்கள் ஆர்ப்பட்டத்தை மேற்கொண்டுவந்தவர்கள் இவர்கள் மீது மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவான தரப்பினர் கோட்டா கோ கமவிற்கு வருகை தந்து தாக்குதலை மேற்கொண்டனர். ஆவேசத்தை கட்டுப்படுத்திகொள்ள முடியாத குறித்த குழுவினர் அமைதினயான முறையில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டடோர் மீதும் அவர்களது கூடாரங்களுக்கு சேதத்தினை ஏற்படுத்தியுள்ளனர். இதில் இருந்து ஒன்று தெலிவாக புலப்படுகின்றது. நாட்டை கட்டியெழுப்பவேண்டும் என நினைக்கும் ஒரு குழுவினர் இதற்கு எதிராக செயற்படும் இன்னுமோர் குழுவும் செயற்படுவதை அவதானிக்ககூடியதாக உள்ளது. அதிகார வலுவை இழக்கின்றபோது பயத்தின் காரணமாக இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபடுகின்றனர்.” என சமூகசெயற்பாட்டளர்
ஹரிந்த பொன்சேகா தெரிவித்தார்.

பேராசிரியர் ஆசு மாரசிங்க – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்

“இதைத் திட்டமிட்ட பிரதமரின் மகன் இன்று நாட்டை விட்டுவௌியேறியுள்ளார். இதுதான் உண்மை நிலை. எனவே நாட்டில் உள்ள அனைத்து மக்களும் ஒன்றினைந்து வீதியில் இறங்கி இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கவேண்டும். அந்த உண்மையை கவனத்தில் கொள்ள வேண்டும்.” என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆசு மாரசிங்க தெரிவித்தார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...