பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையிலான பேரணி இன்று மூன்றாவது நாள்!

Date:

இன விடுதலை வேண்டி பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையிலான (மே-18) மக்கள் பேரணி (17.5.2022) மூன்றாவது நாளான இன்று திருகோணமலை மாவட்டம் சிவன்கோவில் முன்றலில் இருந்து ‘வீழ்ந்த இடத்தில் எழுவோம் ‘ என்ற தலைப்பில் ஆரம்பமாகியது.
இப்பேரணியை வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் ஏற்பாடு செய்திருந்தனர்.
சிவன்கோவில் முன்றலில் தயாரிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி மக்களுக்கு பறிமாரி 2009 இறுதி யுத்த காலப்பகுதியில் முள்ளி வாய்க்காலில் இடம்பெற்ற இனப் படுகொலை தொடர்பாக நினைவு கூறப்பட்டது.
இந் நிகழ்வில் மதகுருமார்கள் ,தாயக ஜனநாயக்கட்சி தலைவர் வி.நிமலன் ,சிரேஸ்ட ஊடகவியலார் திருமலை நவம் ஆகியோர்கள் கலந்துகொண்டு பேரணியினை ஆரம்பித்து வைத்தனர்.
இன்று (17) ஆரம்பிக்கப்பட்ட மக்கள் பேரணியானது அனுராதப்புர சந்தியின் உடாக கண்ணியா சென்றடைந்து அங்கிருந்து வவுனியா நெடுங்கேணி செட்டிக்குளம் வீதி வழியாக முல்லைத் தீவைச் சென்றடையும்.
தொடர்ந்து 18.5.2022 அன்று வடமாகாணத்தில் இருந்து வரும் காணாமல் ஆக்கப்பட்டோர்களின் பேரணியுடன் இணைந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முன்றலில் சென்றடைந்து நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்குகொள்ளும்.
இதேவேளை நேற்று (16) மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட இப்பேரணியானது வாழைச்சேனை,வாகரை,மூதூர் வீதி வழியாக மாலை 6 மணிக்கு திருகோணமலையைச் சென்றடைந்தது.
முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம்’ என்ற தலைப்பில் முள்ளி வாய்க்கால் அவல நிலை குறித்து அதனை நினைவு கூர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு கடந்த 12.5.2022 ஆம் திகதி தொடக்கம் கிழக்கில் பல்வேறு இடங்களில் நினைவு கூறப்பட்டு வரும்வேளை இப் பேரணியயானது பொத்துவில்லில் இருந்து ஆரம்பிக்க்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் மதகுருமார்கள்,சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள்,சமூக ஆர்வலர்கள்,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர். இப்பேரணியில் பொதுமக்களை இணைந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

Popular

More like this
Related

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...

இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!

INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம் ஏற்பாடு செய்துள்ள 'இளைஞர்களை தொழில்முனைவராக்கும்  பயணம்...