சட்டப்பூர்வமான போராட்டங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்ய முடியாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பாராளுமன்றத்திற்கு அருகாமையில் ஏற்பட்டுள்ள நிலைமை மோசமடைந்துள்ளமை தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அதில், அரசாங்கம், பொலிஸ் மா அதிபர் மற்றும் அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் ஆயுதப்படையினர் மிகுந்த கட்டுப்பாட்டுடன் செயற்படுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், போராட்டத்தில் கலந்துகொள்ளும் நபர்கள் கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
போராட்டம் நடத்தும் உரிமையை சட்டப்பூர்வமாகப் பயன்படுத்துபவர்களை கைது செய்ய முடியாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் பொதுமக்கள் மதிக்கப்பட வேண்டும், ஆதரிக்கப்பட வேண்டும், இதுபோன்ற போராட்டங்கள் எல்லா நேரங்களிலும் அமைதியாக இருக்க வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம்’ என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.