மட்டக்களப்பில் பொருளாதார நெருக்கடியில் மக்கள் நலத் திட்டங்களை தடையின்றி முன்னெடுப்பதற்கு நிதி நிறுவனங்களுக்கு அழைப்பு!

Date:

தற்போது நாட்டில் நிலவும் அரசியல் பொருளாதார நெருக்கடி நிலமைகளை எதிர்கொள்வதற்கும், மட்டக்களப்பு மாநகர சபையினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி செயற்பாடுகள் உள்ளிட்ட மக்கள் நலத் திட்டங்களை தடையின்றி முன்னெடுப்பதற்கும் மாநகர சபையுடன் கைகோர்க்க வருமாறு மட்டக்களப்பு மாநகருக்குள் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்களுக்கு மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் அழைப்பு விடுத்திருந்தார்.

மட்டக்களப்பு மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குள் தமது வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் அரச-தனியார் வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும் மாநகர சபையினருக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று நேற்றைய தினம் (26) மாநகர ஆணையாளர் நா.மதவண்ணன் தலைமையில் நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

ஒரு நாட்டில் அல்லது ஒரு பிரதேசத்தின் வளர்ச்சியில் தனியார் துறையின் பங்களிப்பானது அளப்பரியது. தனியார் துறையினரின் பங்களிப்பு இல்லாமல் நிலையான அபிவிருத்தியை எட்ட முடியாது. அதன் அடிப்படையில் மாநகர சபையின் செயற்பாடுகளில் தனியார் துறையினரையும் பங்குதாரராக இணைத்து நிலையான அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்கும் வகையில் இந்தக் கலந்துரையாடலானது ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே, அரச சார்பற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்து பல மக்கள் நலத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்ற நிலையில், தற்போது நாட்டில் நிலவும் அரசியல் பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்கும் வகையில், மாநகருக்குள் வர்த்தக செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் ஒவ்வொரு நிதி நிறுவனங்களுடனும் பணியாற்ற எதிர்பார்த்துள்ளோம்.

இதன் ஊடாக மட்டக்களப்பு மாநகர சபையினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி செயற்பாடுகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் தடையின்றி முன்னெடுக்க முடியும். எனவே மாநகர சபையுடன் கைகோர்க்க வருமாறு மட்டக்களப்பு மாநகருக்குள் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் அனைத்து வங்கிகளுக்கும் நிதி நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், மட்டக்களப்பு மாநகர சபையினை இலங்கையில் ஓர் முன்னுதாரணமான சபையாகவும், அழகான நகரமாகவும் மாற்றியமைப்பதற்கு நிதி நிறுவனங்கள் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என தான் எதிர்பார்ப்பதாகவும், குறிப்பாக பூங்காக்கள், சந்திகளை அழகுபடுத்தும் செயற்பாடுகளை இதன் ஊடாக மேற்கொள்ள முடியும் எனவும் இதன்போது மாநகர ஆணையாளர் கருத்து தெரிவித்தார்.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...