மண்ணெண்ணெய்யின் விலையும் அதிகரிக்கப்படும்: எரிசக்தி அமைச்சர்

Date:

மண்ணெண்ணெய் விலையை திருத்தியமைக்க அரசாங்கம் நம்புவதாக அமைச்சரவைப் பேச்சாளர், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அதேநேரம், அரசாங்கம் பயன்படுத்தும் விலைச்சூத்திரத்தின்படி, மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றுக்கு 275 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஒரு லீற்றர் மண்ணெண்ணெய்யை 87 ரூபாவிற்கு விற்பனை செய்வதன் மூலம் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு 275.26 ரூபா நட்டம் ஏற்படும்.

மீனவர்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் உட்பட குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு மாதாந்த நிதியுதவி வழங்கும் வேலைத்திட்டம் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

குறைந்த விலைக்கு மண்ணெண்ணெய் விற்பனை செய்யப்படுவதாலும், சமையலுக்கு அதிகளவான மக்கள் மண்ணெண்ணையை கொள்வனவு செய்வதாலும் பல்வேறு குழுக்களால் மண்ணெண்ணெய் தவறாக பயன்படுத்தப்படுவதாக அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

டீசல் அதிகரிக்கும் போது சில பஸ் சாரதிகள் மண்ணெண்ணையை பதுக்கி வைத்து அதனை வாகனங்களை கொண்டு செல்வதற்கு பயன்படுத்துவதாக அவர் கூறினார்.

மேலும், பேருந்துகளுக்கு புகை சான்றிதழை வழங்குவதில் டீசல் அல்லது மண்ணெண்ணெய் பயன்படுத்தினார்களா என்பது குறித்து விசாரணை நடத்துமாறும் அமைச்சர் போக்குவரத்து அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.

இதேவேளை நிலைமை சீராகும் வரை மண்ணெண்ணெய் விநியோகம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...