மஹிந்த முன்னரே அரசியலில் இருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும்: சமல் ராஜபக்ஷ!

Date:

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது இரண்டாவது நிறைவேற்று ஜனாதிபதி பதவி முடிவடையும்போது அரசியலில் இருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், “பதவிகளை விட்டுக்கொடுக்க ஒருவர் தயாராக இருக்க வேண்டும். காலி முகத்திடலிலும், அலரிமாளிகைக்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை, பொலிஸ் மா அதிபரும் பாதுகாப்புச் செயலாளரும் தடுக்கத் தவறிவிட்டனர். அதனால் அவர்கள் திடீரென ஆத்திரமடைந்தனர். தாக்குதல் நடத்தியவர்களைத் தடுக்காமல் ஐ.ஜி.பி.யும் பாதுகாப்புச் செயலாளரும் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது” என தெரிவித்தார்.

மேலும், அரசாங்க அரசியல்வாதிகள் மீதான தாக்குதல்களின் பின்னணியில் ஜே.வி.பி மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சி இருப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...