மூன்றாவது மாடியிலிருந்து விழுந்த யுவதி அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

Date:

இராகலை நகரில் இயங்கும் உணவகம் ஒன்றின் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்த யுவதி ஒருவர் பலத்த காயங்களுடன் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இன்று (14) காலை 6.30 மணியலவில் இடம்பெற்றுள்ளதாக இராகலை பொலிஸார் தெரிவித்தனர்.
இதில் ஒரு பிள்ளையின் தாயான இராகலை – ஹல்கரனோயா தோட்டத்தைச் சேர்ந்த
பி.நித்தியபிரபா (வயது 35) என்ற யுவதியே பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
இந்த யுவதி உணவகத்தின் மூன்றாவது மாடியில் வேலை ஆரம்பித்த சில மணி நேரத்தில் ஜன்னல் வழியாக பாய்ந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்திற்கான காரணம் தொடர்பில் இராகலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...