ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை ஏற்கமாட்டோம் – மைத்திரி!

Date:

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான எந்தவொரு அரசாங்கத்திலும் அங்கம் வகிக்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.
கொழும்பில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அமைக்கப்படும் புதிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ளுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழு அழைப்பு மற்றும் நாட்டின் தற்போதைய நிலை குறித்து நீண்ட நேரம் கலந்துரையாடியதுடன், அதன் பின்னர் ரணில் தலைமையிலான அரசாங்கத்தில் இணைவதில்லை என்ற தீர்மானத்திற்கு வந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...