‘வெசாக் தினத்தில், பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்ட கைதிகளில் ரஞ்சன் ராமநாயக்க இல்லை’

Date:

(File Photo)

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 244 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் இவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

எனினும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இவர்கள் மத்தியில் விடுதலை செய்யப்படவில்லை.

வெசாக் தினத்தன்று கலைஞர்கள் உட்பட பலர் அவருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர் எனினும் அவர் விடுதலை செய்யப்படவில்லை.

இதேவேளை அபராதம் செலுத்த தவறியமைக்காக சிறைச்சாலையில் அடைக்கப்பட்டவர்கள், 40 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர்கள் இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளனர்.

65 வயதுக்கு மேற்பட்ட கைதிகளின் தண்டனையை பாதியாக குறைத்து பாதிக்கு மேல் தண்டனை அனுபவித்த கைதிகளின் எஞ்சிய தண்டனையை ரத்து செய்தும், உயர் நீதிமன்றத்தால் 40 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையை முடித்த கைதிகளின் எஞ்சிய தண்டனையை ரத்து செய்ததன் கீழ் இந்த மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...