‘எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு பெற்றோல் கிடைக்காது, எனினும் வார இறுதியில் இந்தப் பிரச்சினை தீர்க்கப்படும்’ என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
இரண்டாவது நாளாக இன்று (மே 18) நடைபெற்ற பாராளுமன்ற அமர்வின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
நாட்டின் பெற்றோல் விநியோகம் ஏறக்குறைய நிறுத்தப்பட்டு, ஒரே நேரத்தில் எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் வறண்டு கிடப்பதால், நாட்டின் பல பகுதிகள் குறிப்பாக கொழும்பில் பல பகுதிகளில் எரிபொருளைக் கோரி போராட்டங்கள் பெருமளவில் அதிகரித்துள்ளன.
இதேவேளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், நாட்டில் ஒரு நாளுக்கு மாத்திரமே போதுமான அளவு பெற்றோல் இருப்பதாக வெளிப்படுத்தினார்.
இதேவேளை இன்று (மே 18) பெற்றோல் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதால், அத்தியாவசிய தேவைகளுக்கு அன்றி, வரிசையில் நிற்க வேண்டாம் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
வழக்கமான விநியோகம் நாளை (மே 19) தொடங்கும் எனவும், எரிபொருள் நிலையங்களில் டீசல் கிடைக்கும் எனவும் கூட்டுத்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.