அட்டுலுகம பகுதியில் 9 வயது சிறுமியை காணவில்லை!

Date:

அட்டுலுகம பகுதியில் 09 வயது சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த சிறுமி நேற்று (27) காலை காணாமல் போயுள்ளதாக சிறுமியின் பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிறுமி நேற்று (27) காலை 10 மணியளவில் தனது வீட்டிலிருந்து 200 மீற்றர் தொலைவிலுள்ள கடையொன்றிற்கு கோழி இறைச்சி வாங்குவதற்காக சென்று மீண்டும் அவர் வீடு திரும்பவில்லை என்று அவரது தாயார் கூறுகிறார்.

சிறுமி கடையை விட்டு வெளியேறுவது அருகில் உள்ள சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது.

சம்வம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

Popular

More like this
Related

திருகோணமலை புத்தர் சிலை சர்ச்சை: காலம் காலமாக அரசாங்கம் மாறினாலும் பௌத்த மக்களின் உரிமை மாறாது: ஞானசார தேரர்.

திருகோணமலையில் வலுத்துள்ள புத்தர் சிலை சர்ச்சைக்கு மத்தியில் கலகொட அத்தே ஞானசார...

புதிய வவுச்சர் திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கான காலணிகள்!

250க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கு, பாதணிகளை பெற்றுக்கொள்வதற்காக கல்வி அமைச்சினால்...

கிராமிய பாலங்கள் நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

கிராமிய பாலங்களை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் அரச அபிவிருத்தி மற்றும் நிர்மாணத்...

ஷேக் ஹசீனா மரண தண்டனை தீர்ப்புக்கு எதிரான வன்முறை சம்பவங்களில் இருவர் பலி

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மரண தண்டனை தீர்ப்புக்கு எதிரான...