அமைச்சுப் பதவியை பொறுப்பேற்றுள்ள ஐக்கிய மக்கள் சக்தி கட்சியிக் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இன்று (20) பாராளுமன்றத்தில் இந்த விடயத்தை தெரிவித்தார்.
இவ்வாறான நியமனங்கள் கட்சியின் கொள்கைகளுக்கு எதிரானது என எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்துடன் இணைந்து கொள்வதில்லை என்றும் எதிர்க்கட்சிகளின் நல்ல ஆதரவை வழங்குவதற்கும் கட்சித் தலைவர் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே கட்சியின் தீர்மானத்திற்கு புறம்பாக அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொண்டவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் இன்று காலை அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.