ஆடைத் தொழிற்துறையின் வருமானம் 10.8 சதவீதத்தால் அதிகரிப்பு!

Date:

ஆடைத் தொழிற்துறையில், இந்த ஆண்டில், 6 பில்லியன் டொலர் வருமானம் ஈட்டுவதற்கான இலக்கை எட்டக்கூடியதாக இருக்கும் என ஒன்றிணைந்த ஆடைத்தொழிற்துறை சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

பொருளாதார தளம்பல் நிலை காணப்படுகின்ற போதிலும், ஆடைத் தொழிற்துறை வலுவான நிலையில் உள்ளதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் யொஹான் லோரன்ஸ் தெரிவித்துள்ளார்.

ஆண்டின் முதல் காலாண்டில், ஆடைத் தொழிற்துறையின் வருமானம், 1.5 பில்லியன் டொலர் வரையில் அதிகரித்து, தற்போழுது 10.8 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

எவ்வாறிருப்பினும், அந்த வளர்ச்சி வீதத்தில், மார்ச் மாதத்தில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்த போதிலும், ஏப்ரலில் 445.79 மில்லியன் டொலர் வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஒன்றிணைந்த ஆடைத்தொழிற்துறை சங்கங்களின் சங்கத்தின் பொதுச் செயலாளர் யொஹான் லோரன்ஸ் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...

ஜப்பானுக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி!

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை...

அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியது: 7.50 இலட்சம் ஊழியர்கள் பாதிப்பு!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் அரசு நிர்வாகத்துக்கு நிதி ஒதுக்கும் செலவீனங்கள் தொடர்பான மசோதாவுக்கு...