‘ஈவிறக்கமின்றி முறையில் கொல்லப்பட்ட சிறுமி ஆயிஷாவின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்த கொடூரமான குற்றத்திற்காக அவரது குடும்பத்திற்கு விரைவான நடவடிக்கை மற்றும் நீதியை விரைவுபடுத்துவதற்கு நான் உறுதியளிக்கிறேன், என்று ஜனாதிபதி தனது ட்வீட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.
ஆயிஷாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, விரைவான நடவடிக்கை மற்றும் நீதியை துரிதப்படுத்துவதாக உறுதியளித்தார்.
அட்டுளுகம பிரதேசத்தைச் சேர்ந்த 9 வயதுடைய பாத்திமா ஆயிஷா மே 27ஆம் திகதி காணாமல் போயிருந்தார். இன்று மே 28ஆம் திகதி வயல் வெளிகள் அமைந்துள்ள ஓடைக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவரது மரணத்திற்கான காரணத்தை கண்டறிய உதவும் பிரேத பரிசோதனை நாளை, மே 29 ஆம் தேதி நடைபெறும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.