பண்டாரகம, அட்டுளுகம பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ள நிலையில், சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, சிறுமியின் மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 29 வயதுடைய நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
குறித்த நபர் உயிரிழந்த சிறுமியின் உறவினர். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கையின் படி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர் எனவும் அவரது வீடு சிறுமியின் வீட்டிற்கு அருகில் அமைந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ மேலும் தெரிவித்துள்ளார். அவரும் திருமணமாகி இரண்டு குழந்தைகளின் தந்தை ஆவார்.
சந்தேக நபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.