ஆயிஷாவிற்கு என்ன நடந்தது என்பதை பொலிஸார் தீர விசாரித்து சில விடயங்களை முன்வைப்பர். அந்த தகவல்கள் மொத்த நாட்டிலும் பேரதிர்வை ஏற்படுத்தும்.
பகிர முடியாத (பொலிஸ் தரப்பு உறுதிப்படுத்தும் வரை) கிடைக்கும் தகவல்கள். மிகவும் கவலை அளிக்கிறது .
அட்டுளுகமை என்பது ஒரு பாரம்பரிய முஸ்லிம் கிராமம். அன்மைக்காலமாக பண்டாரகமை நகர விட வேகமாக பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடையும், களுத்துறை மாவட்டத்தின் உயர் சனத்தொகையுடைய முஸ்லிம் கிராமம்.
அட்டுளுகமையில் தொழில் செய்யாதவர்களை கண்டு கொள்வது மிகவும் கடினம். அந்த ஊரிற்கு என்று பல சிறப்பம்சங்கள் உள்ளன.
ஆயிஷாவின் தந்தை நல்ல உழைப்பாளி, மிகவும் நல்லவர். அழகாக தொழில் செய்து கொண்டிருந்தார் ஆனால் பொலிசாரின் தகவல் படி ‘ஐஸ்’ எனும் போதைப் பொருளுக்கு சில வருடங்களுக்கு முன் அடிமையாகி உள்ளார்.
எந்த அளவிற்கு அடிமை எனின் தனது சொந்த மகள் கொலை (?) செய்யப்பட்டதைக் கூட உணர முடியாத அளவிற்கு மரத்துப் போயுள்ளார். (பொலிஸ் தரப்பு உறுதிப்படுத்தும் வரை)
எப்போது அவர் போதைக்கு அடிமையானரோ அந்த அழகிய குடும்பத்தின் மொத்த நிம்மதியும் இழந்து விட்டது.
சிறுமி ஆயிஷாவின் மரணம் தொடர்பில் விசாரித்துள்ள பலர், ஏதோ வகையில் போதைப் பொருள் பாவனையுடன் தொடர்புபட்டவர்கள்.
ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். (அவை தொடர்பான விடயங்களை பகிரப்படவில்லை).
சிறுமி ஆயிஷாவின் மரணம் தொடர்பில் பல விடயங்களை ஊகிக்க முடியும் என்றாலும் ,மரண விசாரனை முடிந்த பின்பே தெளிவான முடிவுகளுக்கு வரலாம்.
ஆனால் ஒரு விடயத்தை தெளிவாக கூறலாம், அட்டுளுகமையில் மாத்திரம் அல்ல அனேக முஸ்லிம் கிராமங்களில் போதைப் பொருள் பாவனை மிக வேகமாக அதிகரித்துள்ளது.
போதைப் பொருளுக்கு அடிமையான இளைஞர்கள் சமூகத்திற்கு மிகப் பெரிய சுமையாக ,அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
மகள் ஆயிஷாவின் மரணம் சகல கிராமங்களையும் போதைப் பொருள் பாவனை தொடர்பான தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்வதற்கு தூண்டுதலாக அமைய வேண்டும்.
மகள் ஆயிஷா கொல்லப்படவில்லை மொத்த சமூகத்தின் ஆன்மாவும் கொலை செய்யப்பட்டுள்ளது. இன்னும் தாமதித்தால் இன்னும் பல ஆயிஷாக்களை இழக்க வேணடி ஏற்படும்.