தமது அரசாங்கம் ஆறு வாரங்களுக்குள் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இடைக்கால வரவு- செலவுத் திட்டம் நிவாரண வரவு செலவுத் திட்டமாக முன்வைக்கப்படும் எனவும், உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக ஒதுக்கப்படும் பணம் இரண்டு வருட நிவாரணத் திட்டத்திற்கு பயன்படுத்தப்படும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.
தோல்வியடைந்த பொருளாதார முகாமைத்துவத்தினால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை தீர்த்து நாட்டை வழமைக்கு கொண்டு வருவதற்கு மேற்கொள்ள வேண்டிய பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக நாட்டின் பணவீக்கம் மேலும் அதிகரிக்கலாம் எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
22 மில்லியன் இலங்கை சனத்தொகையில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய குழுக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு நிதி வழங்குவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.