இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச சமூகத்தின் கவலை! :சிறப்புக் கட்டுரை

Date:

உலகெங்கிலும் உள்ள பல நாடுகளும் மனித உரிமை அமைப்புகளும் பல ஆண்டுகளாக இந்தியாவில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து கவலை தெரிவித்து வருகின்றன.

குறிப்பாக இந்தியாவில் வசிக்கும் சிறுபான்மையினரை வன்முறை மற்றும் துன்புறுத்தலில் இருந்து பாதுகாப்பு அளிப்பதும் இதில் அடங்கும்.

எவ்வாறாயினும், இந்தியா குற்றச்சாட்டுகளை மறுத்து, மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் தனது அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்றே வலியுறுத்தி வருகின்றது.

மனித உரிமை மீறல்கள் குறித்த இந்தியாவின் சமீபத்திய அறிக்கை மற்றும் அவை தொடர்பான ஐ.நா.வின் நிலைப்பாடு குறித்து இந்தக் கட்டுரை கவனம் செலுத்துகிறது.

ஜூலை 22, 2021 அன்று, பிரிட்டனின் பென்டகனின் பிரபு ஹாரிஸ், இந்தியாவில் மனித உரிமை மீறல்களுக்கு பிரிட்டனின் நிலைப்பாடு பற்றி கேள்வி எழுப்பினார்.

அரச சார்பற்ற நிறுவனங்கள், குறிப்பாக இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள், தலித்துகள் எனப்படும் தாழ்த்தப்பட்ட சாதியினராகக் கருதப்படும் இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவ சிறுபான்மையினர் மீதான பிரிட்டனின் மதிப்பீடு லார்ட் ஹாரிஸ் கேள்வி எழுப்பினார்.

இந்தியாவில் என்ன நடைபெறுகின்றது?

சமீப காலமாக இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் சம்பவங்கள் பல பதிவாகியுள்ளன. இதில் குடியுரிமை (திருத்தம்) சட்டம் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அரசியலமைப்பு சுயாட்சியை ஒழித்தமை ஆகியவை முக்கியமானவை.

இவ்வாறான முன்னெடுப்புக்கள் நாட்டில் சிறுபான்மை மதத்தினர் உட்பட சில குழுக்களின் பாதுகாப்பு குறித்த கவலையை எழுப்பியுள்ளது. பின்வரும் பகுதி இந்த மாற்றங்களின் சிலவற்றை அலசுகின்றது.

குடியுரிமை (திருத்தம்) சட்டம்

இந்தியாவில் வாழும் சிறுபான்மையினரின் பாதுகாப்பு தொடர்பாக பல தடவை பிரச்சினைகள் எழுந்துள்ள. 2019 டிசம்பர் குடியுரிமை (திருத்தம்) சட்டம் இந்திய பாரளுமன்றமான லோக் சபாவில் நிறைவேற்றப்பட்ட போது, அச்சட்டத்தின் நியாயமற்ற நிலை காரணமாக பல உலக நாடுகள் இது குறித்து கவலை தெரிவித்தன.

மேற்படி குடியுரிமை (திருத்தம்) சட்டமானது 2015 ஆண்டிற்கு முன் ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு வந்த சில மத சிறுபான்மையினருக்கு விரைவான குடியுரிமையை வழங்குகிறது.

இந்த சிறுபான்மையினரில் இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், ஜைனர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களை உள்ளடக்கபட்டிருந்தாலும் முஸ்லிம்கள் ஒதுக்கப்பட்டனர்.

ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் இச்சயெலை ‘மோசமான ஓரங்கட்டல்’ என்று வர்ணித்தது. மேலும் இச்சட்டத்தின் தனித்துவமான மற்றும் நியாயமற்ற முஸ்லிம் புறக்கணிப்பு குறித்து சர்வதேச சமூகமும் கவலை தெரிவித்தது.

சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையமும் இந்த நடவடிக்கையால் ‘ஆழ்ந்த மன உளைச்சலுக்கு ஆளாவதாக’ கூறியது.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு இந்தியா முழுவதும் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால், பொலிஸாருக்கு போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டு பலர் காயமடைந்தனர்.

இதற்குப் பதிலளித்த பிரதமர் நரேந்திர மோடியின் பாரதீய ஜனதா கட்சி இந்த மசோதா முஸ்லிம்களை ஓரங்கட்டுவதற்காக அல்ல, மாறாக மதத் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காகவே கொண்டுவரப்பட்டுள்ளது என்றார்.

இந்த மசோதா மற்றும் இந்தியாவில் போராட்டக்காரர்கள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டது குறித்து இங்கிலாந்து அரசாங்கத்திடன் கருத்து வினவப்பட்டது. வெளியுறவு, பொதுநலவாய மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தின் (FCDO) விம்பிள்டனின் இராஜாங்க அமைச்சர் பிரபு அஹமத், சட்டத்தின் உள்நோக்கம் மற்றும் அதற்கான பொது பதில் குறித்து இந்திய அரசுடன் விவாதித்ததாக கூறினார்.

லண்டனில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கும் இந்த விடயத்தை சமர்பித்ததாக குஊனுழு தெரிவித்தது. அதற்கு இந்திய அரசு கீழ் வருமாறு பதில் அளித்தது:

‘மத சகிப்புத்தன்மை தொடர்பான பெருமைமிக்க வரலாற்றை இந்தியா கொண்டுள்ளது. தேர்தலுக்குப் பிறகு, ‘ஒன்றாக, அனைவருக்கும் வளர்ச்சி, அனைவருக்கும் நம்பிக்கை’ என்ற வழிகாட்டுதல் கொள்கைகளின் கீழ் இந்த நிலைப்பாட்டை தொடர பிரதமர் மோடி உறுதியளித்தார்’

எவ்வாறாயினும், இந்த அரசியலமைப்பின் காரணமாக ஏற்படும் சாத்தியமுள்ள தாக்கம் குறித்து அக்கறை கொள்ளும் தனது சிறுபான்மை குடிமக்களுக்கு இந்திய அரசாங்கம் எந்தத் தீங்கும் செய்யாது என்று உறுதியளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். மேலும் நாம் நிலைமையை தொடர்ந்து கண்காணிப்போம் எனவும் கூற விரும்புர்கின்றோம்.

ஜம்மு – காஷ்மீர்

ஆகஸ்ட் 2019 இல்,இந்திய அரசியலமைப்பின் 370ஆவது பிரிவை இந்திய அரசு ரத்து செய்தது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் இருந்து சுய ராஜ்யத்திற்கான அரசியலமைப்பு உரிமையை அது நீக்கியது.

முன்பு பிரிவு 370 மாநிலத்திற்கு அதன் சொந்த அரசியலமைப்பின் மீது சுயாட்சி மற்றும் சட்ட சுதந்திரம் உட்பட பல செயல்பாடுகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதால் ஜம்மு காஷ்மீரில் கொந்தளிப்பு ஏற்பட்டது. இது இந்தியப் படைகளை அனுப்புவது, தொலைபேசி மற்றும் இணைய சேவைகளை முடக்குவது மற்றும் ஜம்மு காஷ்மீரில் சில அரசியல்வாதிகள் மற்றும் முக்கியஸ்தர்களை கைது செய்வது வரை சென்றது.

இதே வேளை மேற்படி சட்ட நீக்கமானது பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு உதவும் என்று இந்திய அரசு கூறியது. எவ்வாறாயினும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் குடிமக்கள் அல்லாதவர்கள் அப்பகுதி நிலத்தை வாங்கும் அனுமதியை மேற்படி சட்ட மாற்றம் வழங்குகின்றது.

இதன் மூலம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பெரும்பான்மையாக இருக்கும் முஸ்லிம் சனத்தொகை வரைபடத்தை மாற்றுவது இந்திய அரசாங்கத்தின் உள்றோக்கம் என அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

காஷ்மீரில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்த ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் பரிசீலிக்க வேண்டும் என்று முன்னாள் ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் செயித் ராட் அல்-ஹுசைனின் 2018 ஆம் ஆண்டு அறிக்கை கோரியுள்ளது.

2018 ஒக்டோபரில், பிரிட்டனின் பாராளுமன்றத்தில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகரின் அறிக்கை குறித்து கருத்துத் பரிமாறப்பட்டது.

2018 ஜூன் மாதத்தில் மனித உரிமைகள் பேரவைக்கு முன்னாள் உயர்ஸ்தானிகர் செயிட் அவர்களின் வழங்கல் மற்றும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசாங்கங்களுக்கு வழங்கப்பட்ட தெளிவான பரிந்துரைகளை நாம் கவனத்தில் கொளவதோடு அவை கடைபிடிக்கப்படும் எனவும் நம்புகிறோம்.

தலித் இனத்தவருக்கு எதிரான வன்முறை

இந்தியாவில் பல ஆண்டுகளாக தலித் சமூகத்திற்கு எதிரான வன்முறை சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. உத்தரபிரதேசத்தில் 19 வயது தலித் பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதை அடுத்து 2020 ஆம் ஆண்டு போராட்டங்கள் வெடித்தன. தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு எதிராகப் பதிவாகும் பல வன்முறைச் சம்பவங்களில் இது ஒன்று மட்டுமே.

தலித் சமூகத்ததவர் இந்தியாவில் உள்ள இந்து சாதி அமைப்பின் மிகக் கீழ் மட்ட இனம் என்று விவரிக்கப்படுகிறது. உலகின் பழமையான சமூக அடக்குமுறைகளில் சாதி முறையும் ஒன்றாகும். இந்த வழமை இந்துக்களை அவர்களின் தொழில்கள் மற்றும் மத நடைமுறைகளின் அடிப்படையில் கடுமையான படிநிலை குழுக்களாக பிரிக்கிறது.

ஆனால் இந்திய அரசியலமைப்புச் சட்டம் சாதியின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதைத் தடை செய்கிறது, ஆனால் அது அவ்வாறிருந்த போதிலும், ஜாதிப் பிரிவினை அங்கு வலுவாகவே இருக்கின்றன என்று பிபிசி தெரிவித்தது.

உயர்சாதி இந்துக்கள் தங்களை உயர்ந்தவர்கள் என்று நினைப்பது போலவே, தலித்துகள் போன்ற தாழ்வான இந்துக்கள் தாம் தாழ்ந்தவர்களே மற்றும் தீண்டத்தகாதவர்களே என்று உறுதியாக நம்புகிறார்கள். எனவே, இந்து சாதி அமைப்பை மாற்றுவது மிகவும் கடினம்.

ஏனைய சிறுபான்மை குழுக்களுக்கு எதிரான கொடுமைகள்

இந்தியாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வெறுப்பு மற்றும் இனவெறி குற்றங்கள் 2020 ஆம் ஆண்டளவில் கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்து மதத்த தீவிரவாதிகளுக்கு இந்திய அரசு வழங்கும் ஆதரவே இப்பிரச்னைக்கு முக்கியக் காரணம் என்று பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.

ஜூன் 2021 இல், ஓபன் டோர்ஸ் என்று அழைக்கப்படும் ஒரு கிறிஸ்தவ ஆலோசனை அமைப்பு இந்தப் பிரச்சினை தொடர்பான ஒரு அறிக்கையை வெளியிட்டது. அறிக்கையின் முக்கிய அவதானிப்புக்கள் பின்வருமாறு,

இந்தியாவில் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ள பல கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு, அவர்கள் வாழ்வாதாரத்தை மேற்கொள்வது மற்றும் அவர்களின் மத அனுஷ்டானங்களை கடைப்பிடிப்பது மிகவும் கடினமான விடயங்களாகி வருகின்றன.

மேலும் இப்பிரச்சினைகளுக்கு இந்திய பெரும்பான்மை மக்களாலும் பலமிக்க இந்து அரசியல்வாதிகளாலும் ஆதிக்கம் செலுத்தப்படும் இந்து தீவிர வலதுசாரி அமைப்புகளே காரணமாகும்.

இந்தியாவில் உள்ள மத சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சகாக்களின் கேள்விகளுக்கு பிரிட்டன் அரசு பதிலளித்துள்ளது.

2021 ஜூன் மாதத்தில் பிரிட்டன் பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது இந்தியாவுடனான அதன் உரையாடலின் வழக்கமான அம்சமாக மனித உரிமைகள் குறித்தும் பேசியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, 2021 மார்ச 15 அன்று விம்பிள்டனின் பிரபு அஷ்மத், இந்தியாவில் உள்ள கிறிஸ்தவர்களின் நிலைமை குறித்து இந்திய உள்துறை இணை அமைச்சருடன் விசாரித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

புது தில்லியில் உள்ள பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகராலயம் மதப் பிரதிநிதிகளை அடிக்கடி சந்தித்து சிறுபான்மை உரிமைகளை மேம்படுத்துவதற்கான திட்டங்களை செயல்படுத்துகிறது.

இந்த ஆண்டு, பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகராலயம் இந்திய மதத் தலைவர்களின் குழுவிற்கு மதங்களுக்கு இடையேயான தலைமைத்துவ திட்டத்தை ஆதரித்து நவீன, மத மற்றும் ஒருங்கிணைந்த சமூகங்களை வழிநடத்தும் மற்றும் சகிப்புத்தன்மையின் பெருமானங்கள் மற்றும் பன்முக கலாசாரங்களை மேம்படுத்துவதற்கான சிறப்பு அறிவைப் பகிர்ந்து கொள்வதற்கான திட்டங்களை முன்வைத்தள்ளது.

விவசாய சமூகத்தின் கிளர்ச்சிகள் மற்றும் விவசாய சீர்திருத்தங்கள்

2020 செப்டெம்பர் மாதத்தில், விவசாய சீர்திருத்தச் சட்டத்தை லோக் சபா நிறைவேற்றியது. இதன் போது ஏனைய பல விடயங்களுடன் விவசாய உற்பத்திகளின் விற்பனை, விலை நிர்ணயம் மற்றும் களஞ்சியப்படுத்தும் விதிகளை மேற்படி சட்டம் மாற்றியது. இதன் குறிக்கோளாக விவசாய வருமானம் மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிப்பதை இந்திய அரசு சுட்டிக்காட்டியதாக பிபிசி தெரிவித்தது.

இருப்பினும், விவசாயிகள், விவசாய சங்கங்கள் மற்றும் எதிர்கட்சிகள் மேற்படி மசோதாவிற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்ததுடன் அதன் காரணமாகஇந்தியா முழுவதும் பரவிய போராட்டங்களில் 400 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

மேலும், இந்த போராட்டத்தை செய்தி சேகரிக்க வந்த பல பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
பத்திரிக்கையாளர்கள் மீது இந்திய அரசு முன்வைத்துள்ள அபத்தமான குற்றச்சாட்டுகளை இந்திய அதிகாரிகள் திரும்பப் பெற வேண்டும் என்றும், அவை ஆதாரமற்றவை என்றும் ஹியுமன் ரயிட்ஸ் வொச் மனித உரிமை அமைப்பு வலியுறுத்தியது.

அவ்வமைப்பின் தெற்காசிய இயக்குனர் மீனாட்சி கங்குலி கருத்துத் தெரிவிக்ககையில் போராட்டங்களுக்கு எதிரான இந்திய அதிகாரிகளின் நடவடிக்கையை கண்டித்துள்ளார். மேற்படி நடவடிக்கைகளாவன,

அமைதியான போராட்டக்காரர்களை அவதூறு செய்வதற்கும், அரசாங்க விமர்சகர்களைத் துன்புறுத்துவதற்கும் மற்றும் சம்பவம் தொடர்பாக செய்தி சேகரித்தவர்கள் மீது வழக்குத் தொடுப்பதையும் இலக்காக கொண்டவை என கங்குலி குற்றம் சாட்டினார்.

அதைத் தொடர்ந்து, இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் பின் விவசாயச் சீர்திருத்தச் சட்டம் ஜனவரி 2021 இல் இடைநிறுத்தப்பட்டது.

பிப்ரவரி 2021 இல், அமைதியான போராட்டம் மற்றும் பேச்சு சுதந்திரத்திற்கான உரிமைக்கு ஆதரவாக பிரிட்டன் குரல் கொடுத்தது. எந்த ஒரு போராட்டமும் வரம்பை மீறி நடந்தால் மட்டுமே சட்டம் ஒழுங்கை அமல்படுத்தும் அதிகாரம் அரசுக்கு உள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விவசாயிகளின் போராட்டங்களை உன்னிப்பாகக் கண்காணிப்பதில் உறுதி பூண்டுள்ளதாகவும், உலக அளவில் மனித உரிமைகளுக்காக தலைமைத்துவம் வழங்க தமது அரசு தயாராக உள்ளதாகவும் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஏனைய அமைப்புகள் எழுப்பிய கரிசனைகள்

சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவில் நிகழ்ந்துள்ள ஏனைய பல கவலைக்கிடமான சம்பவங்கள் குறித்தும் பல நிறுவனங்கள் அக்கறை தெரிவித்துள்ளன.

2021 ஏப்ரல் மாதத்தில், சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையத்தின் அறிக்கை, மத சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களுள் விடயத்தில் இந்தியாவை தீவிர அவதானிப்புக் காட்ட வேண்டிய நாடாக நியமிக்க அமெரிக்க வெளியுறவுத்துறையிடம் கேட்டிருந்தது.

இந்திய அரசாங்கம் இந்து தேசியவாதக் கொள்கைகளை ஊக்குவித்து, அதன் விளைவாக, முறையான, பிடிவாதமான மற்றும் மத சுதந்திரத்தை கடுமையாக மீறுவதாக அறிக்கை குற்றம் சாட்டியது.

ஹியுமன் ரயிட்ஸ் வொச் அமைப்பின் 2021 உலக அறிக்கையில், அரச கொள்கைகளை விமர்சிக்கும் உரிமைப் அமைப்புக்கள், ஆர்வலர்கள், பத்திரிக்கையாளர்கள், மாணவர்கள், அறிஞர்கள் உட்பட்ட பலரை பாஜக தலைமையிலான அரசாங்கம துன்புறுத்துவதாகவும், கைது செய்வதாகவும் மற்றும் வழக்குத் தொடுப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

பிரபல மனித உரிமைகள் அமைப்பான ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல், இந்தியாவில் 2020 இல் நடந்த இனவெறி சம்பவங்கள் குறித்து கவலை தெரிவித்துள்ளதுடன் கீழ் வருமாறு கூறியுள்ளது:

‘கருத்துச் சுதந்திரம் விடயத்தில் ஒருதலைப்பட்சமாக மக்கள் நடத்தப்படுகின்னர். அமைதியான போராட்டங்கள் மீதான சட்டவிரோத கட்டுப்பாடுகள் மற்றும் விமர்சகர்களின் குரலை ஒடுக்குதல் போனடறை அதிகரித்த வருகின்றன.

மாணவர்கள், அறிஞர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் கலைஞர்கள் உட்பட மனித உரிமைக்காக குரல் எழுப்புபவர்கள் பெரும்பாலும் குற்றம் சுமத்தல் அல்லது விசாரணையின்றி தன்னிச்சையாக கைது செய்யப்பட்டனர்’

இருப்பினும், மேற்படி மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை இந்திய அரசு வன்மையாக மறுத்துள்ளது. ஏப்ரல் 2021 இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய மனித உரிமைகள் உரையாடலில் மனித உரிமைகளுக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை இந்திய அரசு மீண்டும் உறுதிப்படுத்தியது.

இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் மேற்கு ஐரோப்பாவுக்கான இணைச் செயலாளரும், இந்தியாவுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதரும் இந்த விவாதத்திற்கு தலைமை தாங்கினர்.

இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய மனித உரிமைகள் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கீழ் வருமாறு கூறப்பட்டுள்ளது:

‘சமூக, பொருளாதார மற்றும் கலாச்சாரத் துறைகள் உட்பட மனித உரிமைகளை வலுப்படுத்தும் நிகழ்வுகள் குறித்து கருத்துக்களை பங்கேற்பாளர்கள் பரிமாறிக் கொண்டனர்.

அவர்கள் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள், மதம் அல்லது மத நம்பிக்கை சுதந்திரம், பெண்களை வலுவூட்டல், சிறார்கள் உரிமைகள், சிறுபான்மையினர் மற்றும் ஆபத்தை அண்டியுள்ள குழுக்களின் உரிமைகள் குறித்தும் விவாதித்தனர்.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா ஆகிய இரு சாராரும் சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனித உரிமைகள் சட்டங்கள் மற்றும் தரநிலைகளின் அடிப்படையில் மனித உரிமைகள் பிரச்சினைகளில் அதிக தலையீட்டிற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான மனித உரிமை பொறிமுறைகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும், இது தொடர்பாக தேசிய மனித உரிமை அமைப்புகள், சிவில் சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் பங்கையும் இரு தரப்பினரும் ஏற்றுள்ளனர்’

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...