இலங்கைக்கு 65,000 மெட்ரிக் தொன் யூரியா உரத்தை உடனடியாக அனுப்ப இந்தியா முடிவு செய்தற்கு இலங்கை தூதுவர் மிலிந்த மொரகொட நன்றி தெரிவித்துள்ளார்.
இலங்கை ஆண்டு தோறும், 40 கோடி அமெரிக்க டொலர் அளவுக்கு உரங்களை இறக்குமதி செய்து வந்தது. இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக, கடந்தாண்டு இரசாயன உரங்கள் பயன்பாட்டுக்கு தடை விதித்தது.
போதிய அளவில் இயற்கை உரங்கள் கிடைக்காததாலும், மோசமான வானிலையாலும், நெல்,தேயிலை போன்ற வேளாண் பொருட்களின் உற்பத்தியும் இலங்கையில் வெகுவாக குறைந்தது. இதுவும் இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமாக அமைந்தது.
இந்நிலையில், டெல்லியில் உள்ள இலங்கை தூதுவர் மிலிந்த மொரகொட, உரத்துறை செயலாளர் சதுர்வேதியை கடந்த வியாழக்கிழமை சந்தித்து பேசினார்.
அப்போது இலங்கையில் நடப்பு பருவ விவசாயத்துக்கு யூரியா உரத்தை விநியோகம் செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து இலங்கைக்கு 65,000 மெட்ரிக் டென் யூரியாவை விநியோகம் செய்ய இந்தியா முடிவு செய்ததாக டெல்லியில் உள்ள இலங்கை தூதரகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தற்காக உரத்துறை செயலாளர் சதுர்வேதிக்கு இலங்கை தூதர் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சதுர்வேதி கூறுகையில், ”அண்டை நாடுகளுக்கு முதல் முன்னுரிமை என்பதை இந்தியா தனது கொள்கையாக கொண்டுள்ளது. இலங்கைக்கு தேவையான உரத்தை அனுப்ப கப்பலை ஏற்பாடு செய்யும் பணியில் உரத்துறை ஈடுபட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.