கடந்த இரண்டு தசாப்தங்களில் இலங்கையின் தொழிலாளர் இடம்பெயர்வு 286 வீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
சுயதொழில் மற்றும் உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்கள் மூலம் இந்த ஆண்டு மொத்தம் 105,821 பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெறத் தொடங்கியுள்ளனர்.
2022 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் சுயதொழிலுக்காக வெளிநாடுகளுக்குச் சென்றவர்களின் எண்ணிக்கை 67, 156 ஆக இருந்தது (வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிறுவனங்களைத் தவிர). இதில் 30,040 ஆண்களும், 17,121 பெண் ஊழியர்களும் அடங்குவர்.
மேலும், ’25, 224 பெண்கள் மற்றும் 13, 441 ஆண்கள் அடங்கிய உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் மூலம் இந்த ஆண்டில் 38, 665 பேர் வேலைக்காக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர்.
அதற்கமைய 12,701 குவைத்துக்கும், 11,000 பேர் அரபு இராச்சியத்துக்கும், 1,754 க்கும் தென் கொரியாவுக்கும் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்தும் நாடுகள், நோய்த்தடுப்பு மற்றும் தனிமைப்படுத்தல் வசதிகள், ஒன்லைன் பதிவு போன்ற நடவடிக்கைகள் மூலம் சர்வதேச வேலைவாய்ப்புத் துறையை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளை சமீபத்தில் மேற்கொண்டுள்ளன.
வெளிநாட்டு ஊழியர்களுக்கான பாதுகாப்பு மற்றும் நலன்புரி வசதிகளும் தூதரக மட்டத்தில் பெரிதும் மேம்படுத்தப்பட்டுள்ளன என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.