ஹிஜ்ரி 1443ஆம் ஆண்டின் புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப் பிறை நாட்டின் எந்தப் பாகத்திலும் இன்று தென்படவில்லை என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
ஈதுல் ஃபித்ர் நோன்பு பெருநாள் எதிர்வரும் 3ம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்குமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
புனித ரமழான் மாத தலைப் பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு உறுப்பினர்கள், அகில இலங்கை ஐம்இய்யத்துல் உலமா, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் உள்ளிட்ட பலவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இதன்போதே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.