குடும்பத்தை மையமாகக் கொள்ளாமல், இளைய தலைமுறையினரின் எதிர்காலம் குறித்து சிந்திக்கும், நாட்டைப் பற்றி அக்கறை கொண்ட, அரசியல் இயக்கம் தேவை என முன்வைப்பதன் மூலமே நாட்டின் நீண்டகால ஸ்திரத்தன்மையை அடைய முடியும் என முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் நாம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே முன்னாள் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாடு எதிர்கொண்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கான முதல் படியாக அரசாங்கத்தரப்பினரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்களும் சுமார் இரண்டு வருடங்களாக பேணி வந்த ஆணவம், சுயநலம் ஆகியவற்றை ஒதுக்கி வைப்பதே நல்லது எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
மக்கள் மத்தியில் கொழுந்துவிட்டு எரியும் இந்த நேரத்தில், அனைத்து அரசியல்வாதிகளும் தங்கள் உரையாடல்கள் 113 பெரும்பான்மை மீது அல்ல, 22 மில்லியன் இலங்கையர்கள் மீது கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.
நாட்டை விட்டு வெளியேறும் வேளையில் கட்சிக்கு அடிமையாக இருக்காமல், பொது மக்களை நெருக்கடிகளில் இருந்து விடுவிப்பதற்கு சகல உதவிகளையும் வழங்குவதே தமது கொள்கை எனவும் டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.