‘உணவு பாதுகாப்பு மற்றும் பயிரிடல்’ சம்பந்தமான தெளிவுபடுத்தல் கருத்தரங்கென்று நாளை புதன்கிழமை கஹட்டோவிட்ட ‘Muslim ladies study circle’ நிறுவன மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வு பிரதேச செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் காலை 9.00 மணிக்கு நடைபெறும்.
நிகழ்வின் கருப்பொருள்களாக விவசாய மற்றும் பயிரிடல் தொடர்பான விடயங்கள், உணவு கெட்டுப்போகாமல் நீண்ட காலம் பாதுகாக்கும் உத்திகள், உளவியல் தொடர்பான விளக்கங்களும் கொடுக்கப்படவுள்ளன.
மேலும் இந்த நிகழ்வுக்கு அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.