ஊடக சுதந்திர தரவரிசையில் 180 நாடுகளில் 146 ஆவது இடத்தில் இலங்கை!

Date:

2022 ஆம் ஆண்டிற்கான சர்வதேச ஊடக சுதந்திரத்தின் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இலங்கை 29 இடங்கள் பின்தள்ளப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

2022 சர்வதேச பத்திரிகை சுதந்திர தரவரிசையில் இலங்கை 146ஆவது இடத்தில் உள்ளதுடன் 2020 மற்றும் 2021 இல் இலங்கை 127ஆவது இடத்தில் இருந்தது.

இலங்கை 2019 இல் 126ஆவது இடத்திலும் 2018 இல் 131 வது இடத்திலும் இருந்தது.

மே 3 சர்வதேச பத்திரிக்கை சுதந்திர தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான நாடுகளின் பட்டியல்ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது.

மேலும் குறித்த அறிக்கையின்படி, 2022 சர்வதேச பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் நோர்வே 92.65 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. டென்மார்க் மற்றும் ஸ்வீடன் முறையே 90.27 மற்றும் 88.84 புள்ளிகளுடன் அடுத்த அடுத்த இடங்களில் உள்ளன.

இந்த ஆண்டு சர்வதேச ஊடக தரவரிசையில் இந்தியா 150ஆவது இடத்திலும், இந்தியாவின் அண்டை நாடான பூடான் 33ஆவது இடத்திலும் உள்ளது.

உலகில் உள்ள 180 நாடுகளின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது, வடகொரியா 13.92 புள்ளிகளுடன் 180வது இடத்தில் உள்ளது.

மியான்மர், துர்க்மெனிஸ்தான், ஈரான் மற்றும் எரித்திரியா ஆகிய நாடுகள் மிகக் குறைந்த அளவில் உள்ளன.
இதற்கிடையில், இந்த ஆண்டு சர்வதேச பத்திரிகை சுதந்திர தினத்திற்கான யுனெஸ்கோவின் கருப்பொருள் ‘டிஜிட்டல் கண்காணிப்பின் கீழ் பத்திரிகை’ என்பதாகும்.

அடிப்படை உரிமைகள் மற்றும் ஊடக சுதந்திரத்தை உறுதி செய்வதில் இணையவெளியில் ஊடகங்கள் மீதான பல்வேறு தடைகள் மற்றும் தாக்குதல்கள் குறித்து இது கவனம் செலுத்துகிறது.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...