எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஐரோப்பிய நாடுகள் உட்பட பல நாடுகளின் தூதுவர்களைச் சந்தித்துள்ளார்.
இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் டென்னிஸ் சாய்பி, ஜேர்மன் குடியரசின் இலங்கை தூதுவர் ஹோல்கர் லோதர் சைபர்ட், இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் எரிக் லவத்து, நெதர்லாந்து தூதுவர் தஞ்சா கோங் கிரிஃபித் ஆகியோர் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து சந்துள்ளனர்.
இதன்போது இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதாகவும் இலங்கையின் முன்னேற்றத்திற்கு உதவிகளை வழங்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்னவும் கலந்துகொண்டார்.