‘எமது உணவுப் பயிர்களை நாமே வளர்ப்போம்’ :தேசிய ஷூரா சபையின் உணவுப் பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டம்!

Date:

‘எமது உணவுப் பயிர்களை நாமே வளர்ப்போம்’ எனும் தொனிப்பொருளின் கீழ் தேசிய ஷூரா சபை உணவுப் பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டமொன்றை (NSC Food Security Program – NSC FSP) ஆரம்பித்துள்ளது.

அதற்கமைய உணவுப் பயிர்களை வளர்ப்பதை ஊக்குவிப்பதன் மூலம் உணவு நெருக்கடியிலிருந்து எம்மையும், எமது குடும்பத்தையும், நாட்டையும் பாதுகாப்பதற்கு சமூகத்திற்கு வழிகாட்டுவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

இத்திட்டத்தின் பிரதான கூறுகளாவன:-

பொருத்துமான அனைத்து இடங்களிலும் உணவுப் பயிர்களை வளர்ப்பதற்கு பொதுமக்களுக்கு ஆர்வமூட்டுவது

வழிகாட்டுதல் மற்றும் தேவையான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளல்

‘மஸ்ஜித்-மைய உணவுப் பாதுகாப்பு மையங்களை (MFSC)’ உருவாக்கி அவற்றை மஸ்ஜித்களை மையப்படுத்தியதாக நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதன் செயற்திட்டங்களாவன:-

மஸ்ஜித்-மைய உணவுப் பாதுகாப்பு மையங்களை (MFSC) உருவாக்குதல் –ஒவ்வோர் ஊரிலும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் அலகாக இம்மையங்களே செயற்படுவுள்ளன.

ஊர்களில் செயற்படும் பொது நிறுவனங்கள் சங்கங்கள் அமைப்புகள் என்பவற்றுக்கு ஊடாகவும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும்.

தனித்தனியாக அல்லது சிறு குழுக்களாக அதாவது கொத்தணிகளாக இணைந்து இல்லங்கள் தோறும் வீட்டுத் தோட்டச் செய்கையை மேற்கொள்ளல்

பொருத்தமான பொது இடங்களான மஸ்ஜித்கள், மத்ரஸாக்கள், சன சமூக நிலையங்கள் போன்றவற்றில் உணவுப் பயிர்களை பொதுவாக வளர்த்தல்.

அரசினால் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பொருத்தமான விவசாய செயற்திட்டங்களில் இணைந்து பயன்பெறுவதற்கான வழிகாட்டல்களை வழங்குதல்.

இவ்வாறு பயிர்ச் செய்கையில் ஈடுபடுவோருக்கு தொழில்நுட்ப வழிகாட்டல்கள், ஆலோசனைகள், உதவிகள் என்பவற்றை அரசின் விவசாயத் திட்டங்கள், விவசாய ஆலோசகர்கள், கள உத்தியோகத்தர்களினூடாகப் பெற்றுக்கொள்வதற்கு வழிகாட்டல்

இத்திட்டத்திற்கு மாவட்ட ரீதியான ஒருங்கிணைப்பை வழங்க அனைத்துப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவ ஒன்றியம் முன்வந்திருப்பதுடன் கள ஆலோசனைகள் மற்றும் தொழில்நுட்ப வழிகாட்டல்களை வழங்க விவசாய நிபுணர்கள், கள உத்தியோகத்தர்கள் முன்வந்துள்ளனர்,

நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சினைகள், விலையேற்றம் மற்றும் பொருட்களுக்கான தட்டுப்பாடு போன்ற பல காரணங்களால் தற்போது நமது நாட்டு மக்கள் பயங்கரமான உணவு நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறார்கள்.

எதிர்வரும் காலங்களில் நிலைமை இன்னும் மோசமடையலாம் என நம்பப்படுகிறது.இந்த நெருக்கடியான சூழலின் கோர விளைவுகளான பசி, பட்டினி, போசாக்கின்மை போன்றவற்றிலிருந்து எம் அனைவரையும் பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது அனைவரதும் கடமையாகும் என தேசிய ஷூரா சபை கேட்டுக்கொண்டுள்ளது.

எனவே, இத்திட்டத்தை தத்தம் பிரதேசங்களில் ஆரம்பிக்க விரும்பும் மஸ்ஜித் நிருவாகங்கள் மற்றும் பொது நிறுவனங்கள் தேசிய ஷூரா சபையை பின்வரும் முறைகளில் தொடர்பு கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறோம்:-

Whatsapp : 0766 270 470 | Email: office546546@gmil.com | Web: www.nationalshoora.com
தேசிய ஷூரா சபையின் உணவுப் பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டப் பிரிவு

Popular

More like this
Related

திஹாரிய தன்வீர் அகடமி ஏற்பாடு செய்த ‘நபிகள் நாயகம்’ பற்றிய கண்காட்சி தொடர்பான படங்கள்!

திஹாரிய தன்வீர் அகடமி ஏற்பாடு செய்த 'பிரபஞ்சத்துக்கு அருளான முஹம்மது நபி ஸல்லல்லாஹு...

165,512 வாகன இலக்கத் தகடுகள் இன்னும் நிலுவையில்!

புதிய வாகன இலக்கத் தகடுகளை வழங்கும் பணியில் ஏற்பட்டுள்ள தாமதத்தை போக்குவரத்து,...

நவம்பர் 30ஆம் திகதி முதல் பஸ்களில் வங்கி அட்டைகள் மூலம் கட்டணம் செலுத்த வாய்ப்பு.

டிக்கெட் இயந்திரங்கள் மூலம் பயணச்சீட்டுக்கள் வழங்கப்படும் பஸ்களில், பயணிகள் வங்கி அட்டைகளைப்...

30ஆவது வருட நிறைவையிட்டு கொழும்பு பங்குச் சந்தையில் மணியோசை எழுப்பிய CDB

நிதியியல் விசேடத்துவம் மற்றும் புத்தாக்கத்தில் தனது வலுவான இடத்தை வலியுறுத்தியபடி, இலங்கையின்...