பொதுஜன பெரமுன அரசியல்வாதிகளுக்கு சொந்தமான வீடுகள், மற்றும் சொத்துக்கள் மீது அண்மைக்காலமாக தாக்குதல்களை ஏற்படுத்தியதற்காக கேகாலை மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத் எதிர்க்கட்சிகளை குற்றம்சாட்டியுள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை (17) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதேநேரம், முன்னிலை சோசலிஸ்ட் கட்சி,ஜே.வி.பி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆகிய கட்சிகள் மீது குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக அலை வீசும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஸ்ரீPலங்கா பொதுஜன பெரமுன நிபந்தனையற்ற ஆதரவை வழங்கும் எனவும் அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
வன்முறை கும்பல்களிடமிருந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு உதவுமாறு அவர் பாராளுமன்ற சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கண்டனம் தெரிவிப்பதாகவும் நாடாளுமன்றில் உரையாற்றியிருந்தார்.
மேலும், வன்முறையை நிறுத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுடன் பொது மக்களிடம் பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்ததாக அவர் மீண்டும் வலியுறுத்தினார்.