எம்.பி.க்களை தன் பக்கம் இழுக்க ரணில் முயற்சி செய்கிறார்: ராஜித

Date:

பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளுடன் பகிரங்கமாக கலந்துரையாடி உரிய உடன்படிக்கைக்கு அமைய அமைச்சரவையை உருவாக்கினால் மக்கள் அமைச்சரவையை ஏற்றுக்கொள்வார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

‘இதன்போது, ரணில் விக்கிரமசிங்க இதுவரை கட்சிகளை அமைச்சரவையில் இணையுமாறு அழைக்கவில்லை, ஆனால் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் தனித்தனியாக இரகசிய கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார்.

கட்சிகளுடன் சம்பிரதாயமான வெளிப்படையான கலந்துரையாடலுக்குப் பின்னர் முறையான உடன்படிக்கைக்கு அமைவாக அமைச்சரவை அமைக்கப்பட்டால்தான் அனைவரும் அதனை ஏற்றுக்கொள்வர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ரணிலுக்கு சுயமரியாதை இருந்தால், இப்போதும் அரசியல் கட்சிகளுடன் வெளிப்படையான உரையாடல்களை நடத்த முடியும் மற்றும் சரியான அரசாங்கத்தை அமைக்க முடியும்’ என்று ராஜித ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

‘பிரதமர் விக்கிரமசிங்க அரசியல் கட்சிகளை உடைத்து எம்.பிக்களை தன் பக்கம் இழுக்க முயற்சிக்கிறார். இதற்கான நிதி தயாராக உள்ளது.

அரசாங்கத்தில் சேர்பவர்கள் பணத்துக்காகவோ அல்லது பதவிக்காகவோ செய்கிறார்கள். அரசாங்கம் தற்போது வெளிப்படையான முறையில் அமைக்கப்பட்டுள்ளது. அப்படி அமைக்கப்படும் அரசுக்கு உலகில் யாரும் உதவ மாட்டார்கள் என்றார்.

இதேவேளை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்படவுள்ளதாக வெளியான தகவல்களுக்கு பதிலளித்த கலாநிதி சேனாரத்ன, இந்த நடவடிக்கையும் சதித்திட்டத்தின் ஒரு அங்கமே என்றார்.

சஜித்துக்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டபோது அதை ஏற்க தாமதமாகிவிட்டார் என்ற குற்றச்சாட்டு தவறானது, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் பிரதமரை நியமிப்பதற்கான புரிந்துணர்வு இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...