ஏனைய கட்சிகள் ஆதரவளித்தால், தேசிய மக்கள் சக்தி இடைக்கால அரசை அமைக்க தயார்: அனுரகுமார

Date:

நாட்டில் நிலவும் அரசியல் ஸ்திரமின்மை மற்றும் அராஜகத்தை தீர்ப்பதற்கு ஏனைய கட்சிகள் ஆதரவு வழங்கினால் ஆறு மாத காலத்திற்கு இடைக்கால அரசாங்கத்தை அமைத்து அதனை தீர்க்கும் பொறுப்பை ஏற்க தேசிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாக அதன் தலைவர் அனுரகுமார திஸ்நாயக்க தெரிவித்துள்ளார்.

அதேவேளை ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும், தற்போது பிரதமர் இல்லாத நிலையில் சபாநாயகர் பதில் ஜனாதிபதியாக செயற்பட வேண்டும் என்பதே தமது முதன்மையான நிபந்தனை என அனுரகுமார தெரிவித்தார்.

தற்போது இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்க ஏனைய கட்சிகள் தயாராக இல்லை என்றால், இடைக்கால அரசாங்கத்தில் அங்கம் வகிக்காமல் எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு ஏனைய கட்சிகளுக்கு ஆதரவளிப்போம் என்றார்.

“நாடாளுமன்றத்தில் எங்களுக்கு மூன்று உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். எவ்வாறாயினும், இந்த அரசியல் ஸ்திரமற்ற தன்மையை சமாளித்து நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டும் வரையில் குறைந்தது ஆறு மாதங்களுக்கு இடைக்கால அரசாங்கத்தை அமைக்க நாங்கள் தயாராக உள்ளோம்” என்று அவர் கூறினார்.

மக்களின் விருப்பத்துடன் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஆறு மாதங்களுக்குப் பின்னர் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்று அனுரகுமார திஸாநாயக்க கூறினார்.

Popular

More like this
Related

சுங்க வருவாய் ரூ. 2 டிரில்லியனைக் கடந்தது!

இலங்கை சுங்கத் திணைக்களம், தனது ஆண்டு வருவாய் செயல்திறனில் ஒரு குறிப்பிடத்தக்க...

கஹட்டோவிட்டவில் MEPS & MLSC நடத்தும் முப்பெரும் விழா 2026.

கஹட்டோவிட்ட Muslim Ladies Study Circle  மற்றும் MEPS ஆகியவற்றின் ஏற்பாட்டில்...

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான விளக்கமறியல் நீடிப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் செப்டம்பர் 23 ஆம் திகதி...

சேதமடைந்த உபகரணங்களுக்காக ரூமேஷ் தரங்கவுக்கு துருக்கிய ஏர்லைன்ஸ் இழப்பீடு!

நாடு திரும்பும் வழியில் தனது விளையாட்டு உபகரணங்களுக்கு ஏற்பட்ட சேதத்திற்காக, இலங்கை...