ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் காலமானார்!

Date:

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபரும் அபுதாபியின் ஆட்சியாளருமான ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் இன்று வெள்ளிக்கிழமை காலமானார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிபரான ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யானின் மறைவுக்காக ஐக்கிய அரபு அமீரகம், அரபு மற்றும் இஸ்லாமிய தேசம் மற்றும் உலக மக்கள் இரங்கல் தெரிவிப்பதாக ஜனாதிபதி விவகார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதேநேரம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் மறைவை முன்னிட்டு, இன்று முதல் 40 நாட்களுக்கு உத்தியோகபூர்வ துக்கம் அனுசரிக்கப்படும் என ஜனாதிபதி விவகார அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் இரண்டாவது அதிபரும், அபுதாபியின் 16வது ஆட்சியாளருமான ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் தனது 73வது வயதில் காலமானார்.

இவருடைய முழுப் பெயர் கலீஃபா பின் சயீத் பின் சுல்தான் பின் சயீத் பின் கலீஃபா பின் ஷாக்பௌத் பின் தியாப் பின் இஸ்ஸா பின் நஹ்யான் பின் ஃபலாஹ் பின் யாஸ், அவருடைய மனைவி ஷேக் ஷம்சா பின்ட் சுஹைல் அல் மஸ்ரூயி. அவருக்கு எட்டு குழந்தைகள்.

ஜனாதிபதி அலுவல்கள் அமைச்சு இன்று முதல் 40 நாட்களுக்கு உத்தியோகபூர்வ துக்கத்தை ஆரம்பிப்பதாக அறிவித்துள்ளது, மேலும் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்.

மேலும் அமைச்சகங்கள், துறைகள், கூட்டாட்சி மற்றும் உள்ளூர் நிறுவனங்கள் மற்றும் தனியார் துறைகளில் மூன்று நாட்களுக்கு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

ஷேக் கலீஃபா பின் சயீத் 2004 இல் தனது தந்தை சயீத் பின் சுல்தான் அல் நஹ்யான் காலமான பிறகு ஜனாதிபதியாக பதவியேற்றார். ஷேக் நஹ்யான் 2009 இல் இரண்டாவது ஐந்தாண்டு காலத்திற்கு அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஜனாதிபதி ஆவதற்கு முன்புஇ ஷேக் கலீஃபா மே 1976 இல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆயுதப் படைகளின் துணைத் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

இன்றையதினம் (11) நாட்டின் கிழக்கு, மத்திய, ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை, அம்பாந்தோட்டை...

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...