‘ஒரு எண்ணெய் கப்பலைக் கூட கொள்வனவு செய்ய முடியவில்லை’: சபையில் ஹர்ஷ

Date:

நாட்டில் எஞ்சியுள்ள வெளிநாட்டு கையிருப்பில் இருந்து ஒரு எண்ணெய் கப்பலைக் கூட கொள்வனவு செய்ய முடியாது என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்தார்.

தற்போது 50 மில்லியன் அமெரிக்க டொலர் கையிருப்பு குறைக்கப்பட்டுள்ளதாகவும், நாடு திவாலான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி உணவுப் பணவீக்கம் 40 சதவீதமாக உயர்ந்துள்ளது.

சுகாதாரத்துறையை நடத்துவதற்கு பணம் இல்லை என்றும், அதற்கு பிரதமர் கொஞ்சம் பணம் தருமாறும் ஹர்ஷ கேட்டுக் கொண்டார்.

தரவுகளை மறைப்பது எமது மோசடியாகும் எனவும் அவ்வாறு செய்ய வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றோம் டொலரின் மதிப்பு இதுவரை 100 சதவீதம் குறைந்துள்ளது, நாட்டில் என்ன நடக்கிறது என்பதுதான் கேள்வி
அரசாங்கம் எடுக்கும் இந்த முட்டாள்தனமான முடிவுகளுக்கு யார் பொறுப்பு என்று ஹர்ஷ டி சில்வா கேள்வி எழுப்பினார்.

Popular

More like this
Related

ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து 84 சடலங்கள் மீட்பு

இலங்கையை அண்மித்த கடற்பிராந்தியத்தில் விபத்துக்குள்ளான ஈரானியப் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை

ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல்...

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...