ஒரு மாதத்திற்கு மேலாகியும் எந்த முன்னேற்றமும் இல்லை: தற்போதைய பொருளாதார நிலை குறித்து மத்திய வங்கி அழுத்தம்!

Date:

நாட்டில் நிலவும் அரசியல் ஸ்திரமின்மை இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியை மோசமாக்கும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க எச்சரித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் ஊடகவியலாளர் மாநாட்டின் நேரடி ஒளிபரப்பின் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய அனைத்து அரசியல் கட்சிகளையும் வலியுறுத்தி, விரைவில் தீர்வு எட்டப்படாவிட்டால், அத்தியாவசியப் பொருட்களுக்கான நீண்ட வரிசைகள் மற்றும் நீண்ட மின்தடை ஏற்படும் என்று அவர் எச்சரித்தார்.

ஏற்றுமதி வருமானத்தை அதே நிறுவனத்திற்கு இறக்குமதிக்காக மட்டுமே செலுத்துவதற்கு அனுமதிக்கும் வகையில் கொள்கையொன்றை நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார்.

மேலும் ‘தற்போதைய நிலைமை அடுத்த இரண்டு நாட்களில் தொடர்ந்தால், தினசரி 10 முதல் 12 மணி நேரம் மின்வெட்டு, எரிபொருள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படலாம்’

‘மிரிஹான சம்பவத்தின் பின்னர் இரண்டு வாரங்களுக்குள் அரசியல் ஸ்திரமின்மை நிலைநாட்டப்படும் என்ற எதிர்பார்ப்புடன் இந்தப் பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டேன்.

ஒரு மாதத்திற்கு மேலாகியும் எந்த முன்னேற்றமும் இல்லை. அரசியல் ஸ்திரத்தன்மையை அடையாவிட்டால் இந்தப் பதவியில் நீடிக்க விரும்பவில்லை’ என்று அவர் மேலும் கூறினார்.

அமைச்சரவை மற்றும் நிதியமைச்சர் இல்லாவிட்டால் கடன் மறுசீரமைப்பு மற்றும் சர்வதேச நாணய நிதியம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை இலங்கை முன்னெடுக்க முடியாது எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

நாளைய தினம் அரசாங்க அலுவலகங்களுக்கு விசேட விடுமுறை

நாட்டில் நிலவும் அவசர அனர்த்த நிலைமை காரணமாக, வழமையான அலுவலக நடவடிக்கைகளை...

முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் முன்னாள் தலைவர் பீ.எம்.ஃபாருக் மறைவுக்கு தமிமுன் அன்சாரி அனுதாபம்!

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் முன்னாள் தலைவர் கலாநிதி...

போப் 14ம் லியோ, தனது முதல் வெளிநாடு பயணமாக துருக்கி விஜயம்.

போப் பதினான்காம் லியோ, தனது முதல் வெளிநாடு பயணமாக துருக்கி நாட்டுக்கு...

தெதுரு ஓயா நீர்த்தேக்கம் நிரம்பி வழிவதால் சிலாபம் நகரம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்!

தெதுரு ஓயா நீர்த்தேக்கம் நிரம்பி வழிவதால் இன்று (27) அல்லது நாளை...