கட்சித் தலைவர்களின் அவசரக் கூட்டம் பிற்பகல் 1.30 மணிக்கு கூட்டப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தின் எதிர்கால அலுவல்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இந்த கட்சித் தலைவர்களின் கூட்டம் இடம்பெறவுள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா, நாட்டில் தற்போது நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அடுத்த வாரம் பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும் என தெரிவித்தார்.