காகித தட்டுப்பாடு காரணமாக நீர் கட்டணத்தை அச்சிடுவது நிறுத்தப்பட்டுள்ளதாக நீர்வள மற்றும் வடிகால் சபையின் பேச்சாளர் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
தண்ணீர் கட்டணங்களை ஈ-பில்லிங் அல்லது எஸ்.எம்.எஸ் மூலம் செலுத்துமாறு என நீர்வள மற்றும் வடிகால் சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை அண்மையில் காகித தட்டுப்பாட்டினால் மின் பட்டியல்கள் அச்சிடும் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்தது.
மின் பாவனையாளர்களுக்கு மின் பட்டியல்களை எழுத்து மூலம் வழங்குமாறு மின் வாசிப்பாளர்களுக்கு அறிவித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்திருந்தது.