கருத்துச் சுதந்திர உரிமைக்கு பங்கம் விளைவிக்கக் கூடாது என கோரி கிராம சேவையாளர் தொழிற்சங்க சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இன்று (04) கோட்டை புகையிரத நிலையத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
மக்களுக்கு நிவாரணம் வழங்கவும், அரச சேவையில் அரசியல் ஆட்சேர்ப்புகளை நிறுத்தவும், அரச சேவையை நசுக்கவும் இந்த போராட்டம் செய்யப்பட்டிருந்தது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கிராம சேவையாளர்கள் பின்னர் காலி முகத்திடலுக்கு பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜனநாயகத்தை ஸ்தாபித்தல், அடக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்தல் மற்றும் பல கோரிக்கைகளை முன்வைத்து கிராம சேவையாளர் தொழிற்சங்கங்களின் குழுவொன்று கொழும்பு கோட்டையிலிருந்து ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் உள்ள மக்கள் போராட்டத்திற்கு பேரணியாக சென்றது.