கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு இலங்கைக்கான சீனத்தூதுவர் விஜயம்!

Date:

சீனக் குடியரசின் இலங்கைக்கான தூதுவர் கிவ் ஜென்கொங் (Qizheanhong)  தலைமையிலான சீன தூதுக்குழு ஒன்று இன்று கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்தது. இதன்போது இந்த தூதுக்குழுவினர் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் வல்லிபுரம் கனக  சிங்கத்தை சந்தித்து சீன அரசாங்கத்தின் உதவியில் கிழக்கு பல்கலைக்கழகத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பாக கலந்துரையாடினர்.

இந்த சந்திப்பின் அடிப்படையில் கிழக்கு பல்கலைக்கழகம் சீனா நாட்டு பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படுவதுடன் இலங்கை மாணவர்கள் சீன பல்கலைக்கழகத்தில் மேல்படிப்புக்காக செல்லவும், சீன நாட்டு பல்கலைக்கழக மாணவர்கள் இலங்கையில் வந்து பல்கலைக்கழக கல்வியை மேற்கொள்வதற்கும் வாய்ப்பு செய்யப்பட்டுள்ளதாக உபவேந்தர் வல்லி புரம் கனகசிங்கம் தெரிவித்தார்.

இது தவிர இலங்கையின் பிரதான தொழில் வாய்ப்புகளான சுற்றுலாத் துறை மற்றும் விவசாயத் துறையை முன்னேற்றுவது தொடர்பாக சீன நாட்டு தொழில்நுட்ப உதவிகளையும் சீனாவின் உதவி திட்டங்களை பெறுவதற்கும்  உபவேந்தரால் முன் வைக்கப்பட்ட  கோரிக்கை ஏற்கப்பட்டு எதிர்காலத்தில் வழி செய்யப்படும் என்றும் சீன தூதுவர் வாக்குறுதி அளித்தார்.

இது தவிர இலங்கையின் ஐந்து இடங்களில் தற்பொழுது சீனமொழி கற்பிப்பதற்கு  பல்கலைக்கழகங்களில் வசதி செய்து இருப்பது போன்றும் கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் ஆறாவது பல்கலைக்கழகமாக சீன மொழி கற்கும் வசதிகளும் செய்யப்பட இருப்பதாகவும் சீன தூதுவர் தெரிவித்து இன்றைய சந்திப்பின் அடிப்படையில் இந்த வாய்ப்பு கூட இருப்பதாக தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் சீன தூதுவரின் பாரியார், இந்திய தூதரகத்தின் அரசியல் பிரிவு உத்தியோகத்தர், சீனத் தூதரகத்தின் மூன்றாவது செயலாளர் மற்றும் சீன வர்த்தக தூதுக்  குழுவினரும் இங்கு வருகை தந்திருந்தனர்.

சீன தூதுவர் இன்று கிழக்கு பல்கலைக்கழகத்தில்  சர்வதேச விவகாரங் களுக்கானகான பிரத்தியேக அலுவலகம் ஒன்றையும் இங்கு திறந்து வைத்தார். இந்த சர்வதேச பிரிவின் ஊடாக எதிர்காலத்தில் சர்வதேசங்களுடன் சர்வதேச பல்கலைக்கழகங்களில் தொடர்புகளை ஏற்படுத்தி மாணவர்கள் சர்வதேச நாட்டின் கல்வி உதவிகளைப் பெறுவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் உபவேந்தர் வள்ளிபுரம் கனகசிங்கம் தெரிவித்தார்.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...