‘குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு காத்திருக்க முடியாது:பேரறிவாளனை நாங்கள் விடுவிப்போம்’ :உச்ச நீதிமன்றம் அதிரடி!

Date:

பேரறிவாளன் கருணை மனுவில் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக காத்திருக்க முடியாது இது நீதிமன்றத்தால் முடிவு செய்யப்பட வேண்டிய விடயம் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம் ஆளுநரின் முடிவு அவசியமில்லை. மத்திய அரசு வாதிட தயாரில்லையெனில் பேரறிவாளனை நாங்கள் விடுவிப்போம்’எனவும் நீதிபதிகள் அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர்.

பேரறிவாளன் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைத் தண்டனையை அனுபவித்துவருகிறார். சிறையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுள் தண்டனை அனுபவித்த கைதிகளை நாங்கள் விடுவித்துள்ளோம். குற்றத்தின் அளவில் எங்களுக்கு பாகுபாடு இல்லை’ எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் வழக்கு புதன்கிழமை (மே 4) விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் கே.எம். நடராஜ், தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்குரைஞர் ராகேஷ் திவேதி, பேரறிவாளன் தரப்பில் மூத்த வழக்குரைஞர் சங்கர நாராயணன் ஆகியோர் ஆஜராகினர்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல். நாகேஸ்வர ராவ், பி.ஆர். கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசியலமைப்புச் சட்டம் 161ஆவது பிரிவின் கீழ் அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்படுகிறார் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

தொடர்ந்து இந்த வழக்கில் அடுத்த வாரத்துக்குள் மத்திய அரசு தனது முடிவை சமர்பிக்க வேண்டும் என்றும் கூறினர்.

முன்னதாக தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ராகேஷ் திவேதி, ‘பேரறிவாளன் விவகாரத்தில் மத்திய அரசும், ஆளுநரும் மௌனம் காப்பது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது’ என்று வாதாடினார்.

அப்போது பேசிய நீதிபதிகள், ‘பேரறிவாளன் கருணை மனுவில் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக காத்திருக்க முடியாது; இது நீதிமன்றத்தால் முடிவு செய்யப்பட வேண்டிய விஷயம். ஆளுநரின் முடிவு அவசியமில்லை. அமைச்சர் குழுவின் முடிவுக்கு அவர் கட்டுப்படுகிறார். மத்திய அரசு வாதிட தயாரில்லையெனில் நாங்கள் பேரறிவாளனை விடுவிப்போம்’ எனத் தெரிவித்தனர்.

தொடர்ந்து, ’20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் ஆயுள் தண்டனை கைதிகளை விடுவித்துள்ளோம் என்பதை நினைவுப்படுத்திய நீதிபதிகள் பேரறிவாளன் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார்.

குற்ற அளவில் எங்களுக்கு எந்தப் பாகுப்பாடும் இல்லை’ எனவும் தெரிவித்தனர். மேலும், ‘ஆண்டுகள் பல சிறையில் இருந்ததால் அவருக்கு பலவிதமான உடல் உபாதைகள், நோய்கள் ஏற்பட்டுள்ளன’ என்றார்.

தொடர்ந்து பேரறிவாளன் தாக்கல் செய்த கருணை மனு குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என மத்திய அரசின் வழக்குரைஞர் கூறினார்.

அப்போது, ‘இதுபோன்று ஏதாவது சாக்குப்போக்கு கூறுகின்றனர் என தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ராகேஷ் திவேதி கூறினார்.

அப்போது நீதிபதிகள், ‘அந்த கருணை மனுவை ஏற்பது, நிராகரிப்பது அல்லது ஆளுநருக்கே திருப்பி அனுப்புவது குடியரசுத் தலைவரின் முடிவு. அதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. ஆனால் மத்திய அரசு இந்த விஷயத்தில் தகுதியான முறையில் வாதாட தயாராகவில்லையெனில் பேரறிவாளனை நாங்களே விடுவிப்போம்’ என்றனர்.

மேலும், ‘இந்த விவகாரம் விவாதிக்க நாங்கள் தயாராக இல்லை. இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக நடக்கும் ஒன்றை நாங்கள் கண்களை மூடிக்கொண்டு பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது’ என்றனர்.

அப்போது பேரறிவாளன் வழக்குரைஞர் சங்கர நாராயணன், ‘இந்த வழக்கில் முடிவு எடுக்காமல் ஆளுநர் சாக்குப்போக்கு கூறிவருகிறார். மேலும் இந்த வழக்கில் அளுநர் ஒரு தரப்பு அல்ல’ என்றார்.

இந்த நிலையில் ஒரு குற்றவாளி ஆளுநரின் செயலுக்காக அவரை விமர்சிக்க முடியாது என மத்திய அரசின் வழக்குரைஞர் நடராஜ் கூறினார். ‘நான் குடிமகன், எனக்கு உரிமைகள் உள்ளன.

குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநரின் செயல்களை நான் விமர்சிக்க கூடாது என நீங்கள் கூற எவ்வாறு கூற முடியும். நான் விமர்சிப்பேன்’ என்றார்.

30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்துவரும் பேரறிவாளனுக்கு மார்ச் 9ஆம் தேதி உச்ச நீதிமன்றம் பரோல் வழங்கியது. அவர் பரோலில் வெளியே வந்த நிலையில் அவர் மீது எந்தக் குற்றச்சாட்டும் எழவில்லை.

இந்த வழக்கில் கருணை மனுவை விசாரிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என்ற மத்திய அரசின் நிலைப்பாட்டை கருதி வழக்கை இறுதியாக விசாரிக்க வேண்டும் எனக் கூறப்பட்டது.

இதேவேளை முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி 1991ஆம் ஆண்டு மே 21ஆம் திகதி ஸ்ரீபெரும்புதூரில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

(Source:etvbharat)

Popular

More like this
Related

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...