குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் விசேட அறிவிப்பு!

Date:

ஒரு நாள் மற்றும் சாதாரண சேவைகளின் கீழ் ஏற்கனவே நாள் மற்றும் நேரங்களை முன்பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே கடவுச்சீட்டுகள் வழங்கப்படும் என்று குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இம்மாதம் 17ஆம் திகதி முதல் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் வழமை போன்று ஒரு நாள் மற்றும் சாதாரண சேவைகளின் கீழ் கடவுச்சீட்டு வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எனினும், கடவுச்சீட்டு பெறுவதற்கு ஏற்கனவே நாள் மற்றும் நேரத்தை முன்பதிவு செய்தவர்கள் மட்டும் வருமாறு திணைக்களம் தெரிவித்திருந்தது.

இருப்பினும், பல வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே நாள் மற்றும் நேரத்தை முன்பதிவு செய்யாமல் சேவைகளைப் பெற வருவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக முன்பதிவு செய்யாமல் வரும் அனைவரும் சிரமங்களை எதிர்க்கொள்வதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே, www.immigration.gov.lk என்ற இணையத்தளத்திற்கு பிரவேசித்து அல்லது 070 7101 060 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் நாள் மற்றும் நேரத்தை முன்பதிவு செய்பவர்கள் மாத்திரமே நிறுவனத்திற்கு வந்து சேவையை பெற்றுக்கொள்ளுமாறு குடிவரவு குடியகல்வு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...