அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணியொன்று தற்போது கொள்ளுப்பிட்டியை அண்மித்து காலி முகத்திடலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
இந்த எதிர்ப்பு பேரணியால் கொள்ளுப்பிட்டி பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன் போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளமு.
ஜனாதிபதி பதவி விலகுமாறு கோரி காலி முகத்திடலில் முன்னெடுக்கப்படும் போராட்டத்தை நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள ‘கோட்டாகோகமவுடன் இணைத்து மேலும் வலுப்படுத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் தீர்மானித்துள்ளனர்.
அதன்படி, காலிமுகத்திடலைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இளைஞர்களின் பிரதிநிதிகள் ஏற்கனவே ஏனைய போராட்ட இடங்களுக்குச் சென்று அவர்களுடன் கலந்துரையாடல்களை நடத்த ஆரம்பித்துள்ளனர்.
இன்று (மே 28) காலி முகத்திடல் போராட்டத்தின் 50 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் அதேவேளை, அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக பல்வேறு துறைகளைச் சேர்ந்த குழுக்களால் நாள் முழுவதும் பரந்த அளவிலான போராட்டங்கள் நடத்தப்பட்டன.
நாடளாவிய ரீதியில் போராட்டங்களை முன்னெடுத்து வரும் அரச மற்றும் அரசியல் கட்சிகளின் செல்வாக்கிலிருந்து தம்மை விடுவித்து மக்கள் சக்தியை மேலும் அதிகரிப்பதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும் என காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.