கோட்டா கம தாக்குதல்: பேருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டதில் ரூ.400 மில்லியனுக்கும் அதிகமான செலவு

Date:

காலி முகத்திடல் மற்றும் அலரி மாளிகையில் நடைபெற்ற போராட்டத்தின் போது நாடு முழுவதும் தீ வைத்து எரிக்கப்பட்ட பேருந்துகளின் மொத்த மதிப்பு ரூ. 400 மில்லியனாகும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

அதேநேரத்தில் தீ வைக்கப்பட்டதில் 50 பேருந்துகள் முற்றிலும் எரிந்து நாசமானதுடன் மேலும் 25 பேருந்துகள் சேதமடைந்துள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிகழ்வில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு பஸ் சங்கங்கள் பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், விசாரணை முடிந்த பின்னர் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

கிராம உத்தியோகத்தர் மட்டத்திலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை நாட்டின் தற்போதைய நிலைமை பஸ் உரிமையாளர்களை கடினமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதலை பஸ் உரிமையாளர்கள் ஊக்குவிக்கவில்லை அவர்கள் தங்கள் பேருந்துகளை வாடகைக்கு விட்டு தங்கள் வேலையைச் செய்து வருவதாகவும் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...