சட்டவிரோதமாக எரிபொருளை விற்பனை செய்த 137 பேர் கைது!

Date:

நாடளாவிய ரீதியில் சட்டவிரோதமாக அதிக விலைக்கு எரிபொருளை விற்பனை செய்த 137 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
429 இடங்களில் இடம்பெற்ற சோதனைகளில் 27,000 லீட்டர் பெட்ரோல், 22,000 லீட்டர் டீசல் மற்றும் 10,000 லீட்டர் மண்ணெண்ணெய் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கொள்வனவு செய்து அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக இவை பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இதேவேளை சட்டவிரோதமான விற்பனை தொடர்பான முறைப்பாடுகளை 118, 119, அல்லது 1997 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி அறிவிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...